அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

அமலா பால்
பிரீமியம் ஸ்டோரி
News
அமலா பால்

மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ படத்தின் ஒரே ஒரு நாள் ஷூட்டிங் மட்டுமே உதயநிதிக்கு பாக்கி. அதனால், அடுத்த படத்துக்கான கதை வேட்டையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் உதய்.

‘கேப்டன்’ படத்தின் தோல்வியைச் சட்டையே செய்யாமல், முத்தையாவுடன் அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டார் ஆர்யா. இதற்கிடையில் சைலன்ட்டாக இன்னொரு காரியத்தையும் செய்திருக்கிறார். ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடங்க இயக்குநர் பா.இரஞ்சித்துடன் பேசி, படத்தைத் தயாரிக்க ஜீ நிறுவனத்தையும் அணுகினார். நினைத்துப் பார்க்காத பட்ஜெட்டை ஜீ நிறுவனம் ஒதுக்க, ஆர்யாவும் இரஞ்சித்தும் ஹேப்பியோ ஹேப்பி. 2024-ல் படத்தைத் தொடங்கத் திட்டமிட்டு இப்போதே அசத்தலான அட்வான்ஸை வாங்கியிருக்கிறார்கள் ஆர்யாவும் இரஞ்சித்தும்!

மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ படத்தின் ஒரே ஒரு நாள் ஷூட்டிங் மட்டுமே உதயநிதிக்கு பாக்கி. அதனால், அடுத்த படத்துக்கான கதை வேட்டையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் உதய். சமூகம் சார்ந்த விஷயங்களை மையப்படுத்தும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். ‘இனி பொழுதுபோக்குப் படங்களில் நடிப்பதில்லை’ எனவும் திட்டவட்டமாக முடிவெடுத்திருக்கும் உதயநிதி, ‘ஜெய் பீம்’ மாதிரி வாழ்வில் ஒரு படமாவது பண்ணிவிட வேண்டும் என எண்ணுகிறாராம்.

அமலா பால்
அமலா பால்
அமலா பால்
அமலா பால்
அமலா பால்
அமலா பால்

ஹன்ஸிகா சொந்தத் தயாரிப்பில் இறங்கி கையைச் சுட்டுக்கொண்டார். அவர் நடித்து அவரே தயாரித்த ‘மஹா’ படம் பெரிய அளவில் போகவில்லை. ஆனாலும், மனம் தளராமல் அடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஒருகாலத்தில் ஹன்ஸிகாவின் கரிசனப் பார்வைக்காக தவம் கிடந்த நடிகர்கள் பலரும் இப்போது அவரைத் திரும்பிப் பார்க்கும் நிலையில் இல்லை. ஹன்ஸிகா போன் செய்தால் அட்டெண்ட் செய்கிற ஒரே ஹீரோவாக சிம்பு மட்டுமே இருக்கிறாராம். இந்நிலையில், இயக்குநர் ஆர்.கண்ணன் சொன்ன ஹாரர் கதையை டிக் செய்து, அதில் கமிட்டாகியிருக்கிறார் ஹன்ஸிகா. ‘நிச்சயம் தமிழில் அடுத்த ரவுண்ட் வருவேன்’ எனச் சபதம் போட்டுச் சொல்கிறார் அம்மணி.

‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் ஷேர் மட்டுமே 34 கோடி என்கிறார்கள். படம் ஹிட் அடித்த நிலையில், படத்தின் இயக்குநர் மித்ரனை தமிழில் ஜெயம் ரவி, ஆர்யா உள்ளிட்ட நாயகர்கள் அழைத்தபோதும், தெலுங்குப் பக்கம் போய் நானிக்கு கதை சொல்லி ஓகே வாங்கியிருக்கிறார். பக்கா ஃபேமிலி சென்டிமென்ட் கதையாம்!

உஷ்...

வருத்தப்படாத ஹீரோவை, சிங்கமாக உயர்த்தியதில் மின்னும் இயக்குநருக்குப் பெரிய பங்கிருக்கிறது. ஆனால், இப்போது வருத்தப்படாத ஹீரோவைச் சம்பந்தப்பட்ட இயக்குநரால் சந்திக்கக்கூட முடியவில்லையாம். அடுத்த படத்துக்கான வாய்ப்புக்காகப் பலமுறை போன் போட்டபோதும், வருத்தப்படாத ஹீரோ சைலன்ட் மோடிலேயே இருக்கிறாராம்!