Published:Updated:

மிஸ்டர் மியாவ் - அஞ்சலி

அஞ்சலி
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சலி

கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தில் குணச்சித்திரப் பாத்திரத்தில் கருணாஸ் நடிக்கிறார்.

மிஸ்டர் மியாவ் - அஞ்சலி

கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தில் குணச்சித்திரப் பாத்திரத்தில் கருணாஸ் நடிக்கிறார்.

Published:Updated:
அஞ்சலி
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சலி

ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா இருவரும் தீவிரமாகக் காதலிப்பதாக கிசுகிசுக்கள் றெக்கைகட்டுகின்றன. ஆனால், இருவரும் இது குறித்து வாய் திறக்கவில்லை. சமீபத்தில் இருவரும் பாரிஸில் ஒன்றாகச் சுற்றியதும், மும்பை ஹோட்டலில் தங்கியதும் அடுத்தடுத்த பரபரப்புகளாகப் பற்றிக்கொண்டன. மீடியாக்களால் அணுக முடியாத அளவுக்கு ராஷ்மிகா ரகசியம் காக்க, நெருக்கமான நிருபர்களிடம், “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்” எனச் சிரிக்கிறாராம் விஜய் தேவரகொண்டா.

செய்தி வாசிப்பாளராகப் பொதுவாழ்வுக்கு அறிமுகமான பிரியா பவானி சங்கர், பத்திரிகையாளராக நடித்திருக்கும் ‘பிளட் மணி’ படம் கவனம் ஈர்த்திருக்கிறது. சென்னை, குவைத், இலங்கை என மூன்றுவிதமான களத்தில் நகர்கிற கதை தமிழுக்குப் புதுசு. பிரியா பவானி சங்கரின் நண்பனாக, முக்கியத்துவம் இல்லாத பாத்திரத்தில் ‘மெட்ரோ’ சிரிஷ் நடித்திருப்பதுதான் ஆச்சர்யம். இது குறித்துக் கேட்பவர்களிடம், “ஒரு நல்ல கதைக்காக அட்மாஸ்பியர் கேரக்டரில் அழைத்தாலும் நடிக்கலாம்” என நெத்தியடியாக பதில் சொல்கிறார் சிரிஷ்.

மிஸ்டர் மியாவ் - அஞ்சலி
மிஸ்டர் மியாவ் - அஞ்சலி

கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தில் குணச்சித்திரப் பாத்திரத்தில் கருணாஸ் நடிக்கிறார். அவருடைய தங்கை தீக்குளித்து இறப்பது போன்ற காட்சியில் கருணாஸ் கதறி அழுததைச் சமீபத்தில் ஷூட் செய்திருக்கிறார்கள். காட்சி திருப்தியாக வராததால் நான்கைந்து முறை ஷூட் செய்தார்களாம். ஒவ்வொரு முறையும் கிளிசரின் பயன்படுத்தாமல் நிஜமாகவே கருணாஸ் கண்ணீர்விட்டுக் கதற, மொத்த யூனிட்டும் மிரண்டுவிட்டதாம். ‘இயக்குநர் சொல்லும் காட்சியை ஒரு நடிகர் எந்த அளவுக்கு உள்வாங்கி நடிக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகியிருக்கிறார் கருணாஸ்’ என்கிறது படக்குழு.

‘மாநாடு’ படத்தின் வெற்றி சிம்புவுக்குப் பெரிய உயரத்தைக் கொடுத்ததோ இல்லையோ… படத்தில் வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஏகோபித்த வரவேற்பைக் கொடுத்திருக்கிறது. அடுத்து எஸ்.ஜே.சூர்யாவை வைத்துப் படம் இயக்க பலத்த போட்டி நடக்க, இயக்குநர் மிஷ்கினும் தன் கதைக்காகப் போராடிவருகிறார். இதற்கிடையில் அண்ணன் - தங்கை கதை ஒன்றை எழுதி முடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா அதை இயக்கவும் நேரமின்றித் தவிக்கிறாராம். இப்போதைக்கு எஸ்.ஜே.சூர்யா கையில் ஏழு படங்கள் இருக்கின்றனவாம்.

உஷ்…

அமர்க்களமான நடிகரின் படங்களிலேயே அதிக பட்ஜெட் செலவானது தற்போதைய ஸ்ட்ராங்கான படத்துக்குத்தானாம். பிசினஸ் முழுவதுமாக முடிந்திருக்கும் நிலையிலும், மும்பை தயாரிப்பாளருக்குக் கையைக் கடிக்கிற நிலைதானாம். ஆனாலும், இது குறித்து தயாரிப்பாளர் ஏதும் காட்டிக்கொள்ளவில்லையாம். இந்நிலையில் ‘எதுவாயினும் அடுத்த படத்தின் மூலம் சரிசெய்து கொடுக்கிறேன்’ என பைக் நடிகர் உத்தரவாதம் கொடுக்க, நெகிழ்ந்துபோனாராம் தயாரிப்பாளர். #விஸ்வாசமான ஆள்தான்!