Published:Updated:

மிஸ்டர் மியாவ்: அண்ணாத்த அப்டேட்ஸ்

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

ஒரு பாரம்பர்யக் குடும்பத்துப் பெண், காதலனோடு ஓடிப்போவதால் ஏற்படும் சிக்கல்தான் ‘அண்ணாத்த’ படத்தின் மையக்கதை.

மிஸ்டர் மியாவ்: அண்ணாத்த அப்டேட்ஸ்

ஒரு பாரம்பர்யக் குடும்பத்துப் பெண், காதலனோடு ஓடிப்போவதால் ஏற்படும் சிக்கல்தான் ‘அண்ணாத்த’ படத்தின் மையக்கதை.

Published:Updated:
ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி
மிஸ்டர் மியாவ்: அண்ணாத்த அப்டேட்ஸ்

ரஜினிகாந்தின் 168-வது படம் `அண்ணாத்த.’ ‘ஸ்பாட்டில் செல்போன் பயன்படுத்தக் கூடாது’, ‘போட்டோ எடுக்கக் கூடாது’, ‘படம் குறித்த எந்தச் செய்தியையும் யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது’ எனக் கடுமையான கெடுபிடிகளைப் பிறப்பித்திருக்கிறது படக்குழு. ஆனாலும், ஜூ.வி வாசகர்களுக்காக அமர்க்களமான ‘அண்ணாத்த’ அப்டேட்ஸ்…

 தீபாவளிக்குத்தான் ‘அண்ணாத்த’ ரிலீஸ் என சன் பிக்சர்ஸ் அறிவித்திருக்கிறது. ஆனால், இப்போதே 80 சதவிகிதப் படத்தை முடித்துவிட்டார் இயக்குநர் சிவா. தன் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வெற்றியுடன் செம ஸ்பீடில் படப்பிடிப்பை நடத்திவருகிறார் சிவா. ‘ரஜினி, மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை வைத்துக் கொண்டு இவ்வளவு வேகமாகப் படப்பிடிப்பு நடத்துவது ஆச்சர்யம்’ என்று வியக்கிறார்கள் கோடம்பாக்கப் புள்ளிகள்.

 ஒரு பாரம்பர்யக் குடும்பத்துப் பெண், காதலனோடு ஓடிப்போவதால் ஏற்படும் சிக்கல்தான் ‘அண்ணாத்த’ படத்தின் மையக்கதை. அண்ணன்-தங்கச்சி சென்டிமென்ட் கதையில் ரஜினி நடித்துப் பல காலமாகிவிட்டதால், இந்தப் படம் வில்லேஜ் வரை செம ரீச்சாகும் என மிகுந்த நம்பிக்கையோடு நடிக்கிறார்.

 ஷூட்டிங் ஸ் பாட்டில் ரஜினியைப் பச்சைக்குழந்தையைப்போல் அவ்வளவு கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். முதல் ஷெட்யூலில் பாடல் படமாக்கப்பட்டபோது நெல் தூற்றுவதுபோல் காட்சியாம். ஃபேன்கள் வேகமாகச் சுழல சில பதர்கள் கண்ணில்பட்டு, ரஜினிக்கு மிகுந்த எரிச்சலைக் கொடுத்துவிட்டதாம். அதனால், எந்த விதத்திலும் அவருக்குச் சிரமத்தைக் கொடுக்காதபடி பாதுகாப்புடன் ஷூட்டிங் நடத்துகிறார்கள். இயக்குநர் தரப்பைத் தவிர்த்து வேறு யாரும் ரஜினிக்கு அருகில் நெருங்கக் கூடாது என்று உத்தரவாம்!

 ஷூட்டிங் தொடங்கும் முன்னரே படத்துக்கான ஐந்து பாடல்களையும் பக்காவாகப் போட்டுக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் இமான். மனதை உருக்கும் அண்ணன்-தங்கை பாடல், காலத்துக்குமான பாடலாக அமையும் என்கிறார்கள் உறுதியாக.

 படத்தில் ரஜினியுடன் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். பெரும்பாலும் ரஜினி ஸ்பாட்டுக்கு வருவதற்கு முன்னரே மற்ற நடிகர்கள் ஆஜராகிவிடுவார்கள். ஆனால், பலமுறை ரஜினி வந்து சில நிமிடங்கள் கழித்துத்தான் பிரகாஷ் ராஜ் வருவாராம். ஒருநாள் ரஜினி ஸ்பாட்டுக்கு வந்து முக்கால் மணி நேரம் காத்திருக்க, அதன் பிறகே கேரவனைவிட்டு இறங்கியிருக்கிறார் பிரகாஷ் ராஜ். ஆனால், அதற்காக ரஜினி துளியளவும் வருத்தமோ கோபமோ படாமல் இன்முகத்தோடு நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பைக் கைதட்டிப் பாராட்டவும் செய்திருக்கிறார்.

 காட்சிகளை ஷூட் செய்த உடனேயே எடிட் வேலைகளைப் பக்காவாக முடித்துவிடுகிறார் இயக்குநர் சிவா. படத்தின் எடிட்டர் ரூபன். ஆனாலும், இயக்குநர் சிவாவே 90 சதவிகித எடிட்டை முடித்துவிடுகிறாராம். ‘எடிட்டிங் சென்ஸுடன் படமாக்குவதால்தான் இவ்வளவு வேகமாகப் பணிகளை முடிக்க முடிகிறது’ என இயக்குநர் சிவாவை யூனிட்டில் வியந்து பாராட்டுகிறார்கள்.

மிஸ்டர் மியாவ்: அண்ணாத்த அப்டேட்ஸ்

 கதைப்படி வெளி மாநிலங்கள் பலவற்றில் ஷூட்டிங் நடத்தப்பட வேண்டும். ஆனால், ரஜினியின் உடல் நிலையைக் கவனத்தில்கொண்டு, ஹைதராபாத்திலேயே மொத்த ஷூட்டிங்கையும் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

 ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பிறகு ஜோடியாகவே நடித்தவர் மீனா. ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி-மீனா கூட்டணி சேர்ந்தால் கலகலப்புக்குக் குறைவே இருக்காதாம். ‘இந்தக் காட்சியில் இப்படி கண்ணை உருட்டி நடிக்கலாமே…’ என மீனாவுக்கு ரஜினி நடிப்புச் சொல்லிக்கொடுக்க, யூனிட்டே கைதட்டியிருக்கிறது.

 படத்தில் ரஜினியின் வலதுகரமாக சூரி நடிக்கிறார். இந்தப் படத்துக்குக் கொடுத்திருந்த தேதிகள் கொரோனா நெருக்கடியால் மாறியதால், ‘விடுதலை’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் சூரிக்கு கெட்டப் மாற்ற வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. அதற்காக சூரிக்கு ஸ்பெஷல் விக் ரெடி செய்து சமாளித்திருக்கிறார்கள். ரஜினி-சூரி கூட்டணி பெரிதாக வொர்க்அவுட் ஆகியிருக்கிறதாம்.

 இயக்குநர் சிவா - கேமராமேன் வெற்றி இருவருடைய கூட்டணியின் வேகமும் திட்டமிடலும் ரஜினிக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டதாம். ‘நாம் மீண்டும் இணைவோம்’ என ரஜினி சொன்ன வார்த்தைகளை விருது வாங்கிய அளவுக்குக் கொண்டாடுகிறார்கள் சிவாவும் வெற்றியும்!