‘ஓ மை கடவுளே’ ஹிட்டைத் தொடர்ந்து ‘தெகிடி’ இயக்குநர் ரமேஷ் இயக்கத்தில் உருவாகும் த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்கிறார் அசோக் செல்வன். ‘தெகிடி’-க்குப் பிறகு, அசோக் செல்வன் - இயக்குநர் ரமேஷ் கூட்டணியுடன் அதில் நடித்த ஜனனி அய்யரும் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘RRR’, ‘மெய்டான்’, ‘கைதி’ இந்தி ரீமேக் என பிஸியாக இருக்கும் அஜய் தேவ்கன், தற்போது முழுநீள காமெடிக் கதை ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்திரகுமார் இயக்கும் இந்தப் படத்தில், அஜய் தேவ்கனுடன் சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுல் ப்ரீத்சிங் ஆகியோர் நடிக்கின்றனர். இந்திரகுமார் - அஜய் தேவ்கன் காம்போவில் ஏற்கெனவே ‘இஷ்க்’, ‘மஸ்தி’, ‘டோட்டல் தமால்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன.

குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருக்கும் நடிகை சமீரா ரெட்டி, தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அடிக்கடி பதிவிட்டுவருகிறார். சமீபத்தில், கொரோனா காரணமாக பள்ளிக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் தன் மகன் செய்யும் சேட்டைகளை வீடியோ எடுத்துப் பதிவிட்டார். சமூக வலைதளங்களில் அதை பலரும் ரசிக்கிறார்கள்.

இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். அப்போது விஜய் பற்றிய ஒரு கேள்விக்கு, ‘விரைவில் அவருடன் பணிபுரிய இருக்கிறேன்’ என்று உற்சாகமாகக் கூறியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘துப்பாக்கி 2’ படத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக ஏற்கெனவே பேச்சு பரவிய நிலையில், காஜலின் இந்தப் பதில் அதை உறுதிசெய்துள்ளது.

அமிதாப் பச்சன், கத்ரீனா கைஃப் இருவரும் புதிய படம் ஒன்றில் அப்பா - மகளாக நடிக்கவிருக்கின்றனர். ஹியூமரும் எமோஷனும் மிகுந்த இந்தக் கதையை, விகாஷ் பாஹல் இயக்குகிறார். ‘டெட்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பணிகள், கொரோனா பதற்றம் முடிந்த பிறகு ஆரம்பமாகலாம் என்கிறார்கள். கத்ரீனா கைஃப் பாலிவுட்டில் அறிமுகமானதே அமிதாப் பச்சன் நடித்த ‘பூம்’ என்ற படத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வாத்தி நடிகருக்கு, பெண் இயக்குநர் சொன்ன கதை மிகவும் பிடித்திருந்ததாம். ஆனால், அவர் படப்பிடிப்பைத் தொடங்க அவகாசம் கேட்டதால், ‘கன்’ இயக்குநருக்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார் நடிகர். பெண் இயக்குநரின் அதே கதையில் அநேகமாக `தல’ நடிகர் நடிக்கலாம் என்கிறார்கள்!