Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மாளவிகா ஷர்மா
பிரீமியம் ஸ்டோரி
மாளவிகா ஷர்மா

ஹீரோவாக நடிக்கும் படங்களை மிக கவனமாகத் தேர்ந்தெடுக்கிறார் யோகி பாபு. ஹீரோயிசம் இல்லாத கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

ஹீரோவாக நடிக்கும் படங்களை மிக கவனமாகத் தேர்ந்தெடுக்கிறார் யோகி பாபு. ஹீரோயிசம் இல்லாத கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்.

Published:Updated:
மாளவிகா ஷர்மா
பிரீமியம் ஸ்டோரி
மாளவிகா ஷர்மா

தந்தை-மகன் பாசத்துக்கும் மரியாதைக்கும் உதாரணமாக இசையமைப்பாளர் இமானையும், அவர் தந்தையையும் சொல்வார்கள். உற்ற துணையாக நிற்கும் தந்தையின் பேரன்பைப் பல இடங்களில் நினைவுகூர்ந்திருக்கிறார் இமான். இந்நிலையில், சசிகுமார் நடிப்பில் இமான் இசையில் உருவாகும் ‘காரி’ படத்தில், தந்தை-மகன் பாசத்தைச் சொல்லும் ‘கொப்பன் மவனே’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. “தகப்பன் நூறு தாயைப்போல தாங்கிடும் உறவே…” எனப் பாடலாசிரியர் லலிதானந்த் எழுதியிருந்த வரி, இமான் மனதை ரொம்பவே உருக்கிவிட்டதாம். பாடல் வெளியாகி, பரவலான பாராட்டையும் நெகிழ்வையும் பெற்றிருக்கும் நிலையில், இதைக் கேட்க பாடலாசிரியர் லலிதானந்த் உயிரோடு இல்லாததுதான் பெரும் வேதனை. உடல்நலக் குறைவால் கடந்த மாதம் லலிதானந்த் இறந்துவிட்டார்!

ஷாருக் கான் நடிப்பில் அட்லி இயக்கும் படம், மீண்டும் பட்ஜெட் பிரச்னையால் தட்டுத் தடுமாறுகிறது. மகன் சம்பந்தப்பட்ட வழக்கு விவகாரமும் ஷாருக் கானை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியிருக்கிறதாம். பணப் பிரச்னையும் மனப் பிரச்னையுமாக அல்லாடும் ஷாருக் கானிடம், படப்பிடிப்பு குறித்து எப்படிப் பேசுவது எனத் தயங்குகிறார் அட்லி. படம் மேற்கொண்டு நடக்குமா, நடக்காதா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப் போகிறார்களாம்!

மாளவிகா ஷர்மா
மாளவிகா ஷர்மா
மாளவிகா ஷர்மா
மாளவிகா ஷர்மா

ஹீரோவாக நடிக்கும் படங்களை மிக கவனமாகத் தேர்ந்தெடுக்கிறார் யோகி பாபு. ஹீரோயிசம் இல்லாத கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார். ஹீரோவாக நடிக்க இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் யோகி பாபு, காமெடி வேடங்களையும் தவிர்ப்பது கிடையாது. சம்பள விஷயத்தில் கறார் காட்டாமல், நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் யோகி பாபுவின் அணுகுமுறை பலராலும் பாராட்டப்படுகிறது. “மிகப்பெரிய ஹீரோவை வெச்சுப் படம் இயக்கும் ஒரு இயக்குநர், அடுத்து என்னை ஹீரோவா வெச்சு இயக்கப் போறதா சொல்லியிருக்கார். கனவா நனவான்னு என்னால நம்பவே முடியலை” என நெருங்கியவர்களிடம் சிலாகிக்கிறார் யோகி பாபு. யார் அந்த இயக்குநர் என்பதுதான் பரபரப்பான கேள்வியாக இருக்கிறது!

விஜய்யின் ‘பீஸ்ட்’ படமும் ‘கே.ஜி.எஃப் 2’ படமும் நேரடியாக மோதுகின்றன. தனித்த தேதியில் வர வேண்டும் என்றுதான் படம் ரெடியாகியும் பல மாதங்கள் ரிலீஸைத் தள்ளிப்போட்டிருந்தது கே.ஜி.எஃப் டீம். ஆனாலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இணங்கிப்போகாததால், அடுத்தடுத்த நாள்களில் இரு படங்களும் ரிலீஸாகின்றன. “ஐந்து மொழிகளில் ‘பீஸ்ட்’ படம் ரிலீஸாகும் நிலையில், விஜய்க்கு இந்த விஷப்பரீட்சை தேவையா?” என்கிறார்கள் சிலர். ஆனால், கே.ஜி.எஃப் படத்தின் ஹீரோவான யஷ், “இது அரசியல் அல்ல… ஒருவர் வென்றால் ஒருவர் தோற்பதற்கு. சினிமாவில் சேர்ந்தே ஜெயிக்கலாம். நான் என் படத்துடன் ‘பீஸ்ட்’ படத்தையும் பார்ப்பேன்” எனச் சொல்லி சபாஷ் வாங்கியிருக்கிறார்!

உஷ்...

பிரிந்தவர்களைச் சுமுகமாக்க பலவிதங்களிலும் நடந்த முயற்சிகள் பலனளிக்கவில்லையாம். அசுர நடிகரும், உச்ச நடிகரின் மகளும் அந்த அளவுக்கு வீம்பும் விடாப்பிடியுமாக இருக்கிறார்களாம். கடைசி முயற்சியாக, ‘பிள்ளைகளின் வாழ்வு…’ எனச் சொல்லிப் பேசிப் பார்த்தார்களாம் உச்ச நடிகரின் குடும்பத்தினர். இருவரும் இம்மியளவும் இறங்கி வரவில்லையாம்!