அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

நல்ல ஹீரோயின் என்று அல்ல, நல்ல நடிகை என்று மக்கள் சொல்ல வேண்டும் என்பதுதான் நித்யாவின் நோக்கம்

‘வழக்கமான ஹீரோயினாக இல்லாமல், கதையில் தனக்கு நடிக்க எந்த அளவுக்கு இடமிருக்கிறது?’ என்பதுதான் தனக்கு வரும் வாய்ப்புகளில், நித்யா மேனன் தேடும் முதல் விஷயம். நல்ல ஹீரோயின் என்று அல்ல, நல்ல நடிகை என்று மக்கள் சொல்ல வேண்டும் என்பதுதான் நித்யாவின் நோக்கம். அப்படியான கதைகளையே தேர்ந்தெடுத்துவருகிறார். அப்படியான ‘19 (1)(a)’, ‘கமனம்’, ‘கொளம்பி’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கும் நித்யா மேனன், தற்போது பவன் கல்யாணுக்கு ஜோடியாக ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

நீண்ட நாள்கள் தமிழில் நடிக்காமலிருந்த பூனம் பாஜ்வா, ‘ஆம்பள’, ‘அரண்மனை 2’, ‘குப்பத்து ராஜா’ என அவ்வப்போது தலைகாட்டிவந்தார். பட வாய்ப்புகள் பெரிதாக வராததை உணர்ந்த பூனம், தற்போது இன்ஸ்டாவில் தாராளமாகக் கவர்ச்சி காட்டுகிறார். இந்த தாராளம், அவருக்கு ஏராளமான வாய்ப்புகளைக் கொடுக்கும் எனவும் நம்பிக்கொண்டிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டேவை கமிட் செய்திருந்த நிலையில், கேரளாவிலிருந்து இன்னொரு நாயகியும் படத்தில் இணைந்திருக்கிறார். மலையாளத்தில் ‘ஞான் பிரகாஷன்’, ‘மனோஹரம்’ ஆகிய படங்களில் நடித்த அபர்ணா தாஸ்தான் அவர்.

தமிழ், தெலுங்கில் உச்சத்திலிருந்த நடிகை ஜெனிலியா, பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கைத் திருமணம் செய்துகொண்ட பிறகு, படங்களில் நடிக்காமல் இருந்தார். ஜெனிலியாவுக்கு இப்போது இரண்டு மகன்கள். தற்போது, இன்ஸ்டாகிராமில் அதீத ஆக்டிவாக இருக்கிறார் ஜெனிலியா. அவர் பதிவிடும் இன்ஸ்டா ரீல்ஸுக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்துவருகிறது.

உஷ்!

அரசியல் நடிகரின் இரண்டாம் பாகத் திரைப்படம் பாதியில் நிற்க, இயக்குநரோ டோலிவுட்டுக்குச் சென்றுவிட்டார். அதனால், கடுப்பான ராவண நாட்டுத் தயாரிப்பு நிறுவனம், அதை முடித்துக்கொடுக்கச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அந்த இயக்குநரோ அதை சட்டை செய்யவே இல்லை. டோலிவுட் படத்தில் மெகா பவர் நடிகருடன் மெகா நடிகரையும் சேர்த்து நடிக்கவைக்கவும், படத்தின் நாயகியை முடிவு செய்வதிலும் பிஸியாக இருக்கிறார். பெரிய தொகையைத் தயாரிப்பு நிறுவனம் செலவு செய்திருக்கிறதே, இயக்குநர் எப்படி இவ்வளவு கூலாக இருக்கிறார் என்றால், “படம் பாதியில் நிற்க நானா காரணம்... காரணமானவரே கம்முனு இருக்க, நான் ஏன் டென்ஷன் ஆகணும்?” என்கிறாராம்.