பிரீமியம் ஸ்டோரி

காமெடி நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து வெற்றி மாறன் இயக்குவதாக இருந்த படத்தின் ஷூட்டிங் துபாயில் நடப்பதாக இருந்தது. கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப் பட்டுள்ளதால், படம் எப்போது ஆரம்பிக்கும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

 சுனைனா
சுனைனா

இந்தப் படத்தை ஒரு மாதத்தில் முடித்துவிட்டு, சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவதுதான் வெற்றி மாறனின் திட்டம். கொரோனாவால் இப்போது அந்தத் திட்டத்தில் பல மாறுதல்கள் இருக்கலாம் என்கிறார்கள்.

யக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியான நடிகர் கிருஷ்ணாவும் நடிகை சுனைனாவும் காதலித்துவந்தனர்.

கிருஷ்ணா
கிருஷ்ணா

காதலுக்கு இரு வீட்டிலும் கிரீன் சிக்னல் காட்ட, இப்போது கல்யாணப் பேச்சுவார்த்தைத் தொடங்கியிருக்கிறது. கொரோனா பிரச்னைகள் முடிந்ததும், திருமண நாள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

த்ரிஷா
த்ரிஷா

மூக வலைதளங்களில் சீரியஸ் முகம் காட்டிக்கொண்டிருந்த த்ரிஷா, இப்போது செம ஜாலி மூடில் இருக்கிறார். டிக் டாக்கில் அக்கவுன்ட்டைத் தொடங்கிய த்ரிஷா, முதல் வீடியோவில் க்யூட் டான்ஸ் போட, வீடியோ செம வைரல்!

டிகர் விஜய்யின் வீடு, நீலாங்கரையில் இருக்கிறது. இந்த வீட்டைப் புதுப்பிப்பதற்காக தற்போது மாயாஜால் அருகே குடியிருக்கிறார் விஜய். நீலாங்கரை வீட்டை பெருங்கோடிகள் செலவுசெய்து விஜய் புதுப்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த வீட்டில் மே மாதவாக்கில் மீண்டும் குடியேற இருக்கிறாராம் விஜய்.

 மிஸ்டர் மியாவ்

‘ஆடுஜீவிதம்‘ என்ற நாவலை அடிப்படையாகவைத்து மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு, ஜோர்டான் நாட்டில் மார்ச் மாதம் தொடங்கியது. ஷூட்டிங் ஆரம்பித்தபோது, கொரோனா பிரச்னை தீவிரமாக இல்லை. இரண்டாவது வாரத்துக்குமேல் கொரோனா தீவிரமானதால், படக்குழுவினரால் ஜோர்டானிலிருந்து திரும்ப முடியவில்லை. இப்போது படப்பிடிப்பையும் தொடர முடியாமல், இந்தியாவுக்கும் திரும்ப முடியாமல் தவிக்கிறது படக்குழு. படத்தின் இயக்குநர் ப்ளெஸ்ஸி, கேரள திரைப்படச் சங்கத்துக்கு, 58 பேர்கொண்ட தங்கள் குழுவை மீட்டுச் செல்லுமாறு உதவி கோரி கடிதம் எழுதியிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் தாங்கள் தினமும் சந்திக்கும் சவால்களை தொடர்ந்து எழுதிவருகிறார் பிருத்விராஜ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு