Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஷில்பா மஞ்சுநாத்
பிரீமியம் ஸ்டோரி
ஷில்பா மஞ்சுநாத்

ஒடுக்கப்பட்டவரின் பிணத்தை சாலை வழியே எடுத்துச் செல்லத் தடைவிதித்த ஆதிக்க மனப்பான்மையை எதிர்த்து ‘பறை’ என்கிற தலைப்பில் திங்க் மியூசிக் நிறுவனம் பாடல் வெளியிட்டது

மிஸ்டர் மியாவ்

ஒடுக்கப்பட்டவரின் பிணத்தை சாலை வழியே எடுத்துச் செல்லத் தடைவிதித்த ஆதிக்க மனப்பான்மையை எதிர்த்து ‘பறை’ என்கிற தலைப்பில் திங்க் மியூசிக் நிறுவனம் பாடல் வெளியிட்டது

Published:Updated:
ஷில்பா மஞ்சுநாத்
பிரீமியம் ஸ்டோரி
ஷில்பா மஞ்சுநாத்

விஜய்யுடன் ஜோடி சேர வேண்டும் என்பதை வாழ்நாள் லட்சியமாக வைத்திருந்தார் ராஷ்மிகா மந்தனா. தில் ராஜூ தயாரிப்பில் உருவாகும் விஜய்யின் 66-வது படத்தில் ராஷ்மிகா ஜோடி என அறிவிப்பு வெளியானதுதான் தாமதம்… அம்மணியைக் கையில் பிடிக்க முடியவில்லை. ஸ்டில் ஷூட்டுக்காக, தனக்கு அருகில் நின்ற விஜய்க்கு ராஷ்மிகா திருஷ்டி முறிக்க, ஆன்லைனில் ஒரு வாரமாக அதுதான் வைரல்… ‘பீஸ்ட்’ படத்திலேயே விஜய்யுடன் ஜோடி போட விஜய், நெல்சன் வீடுகளுக்குப் பலமுறை படையெடுத்தாராம் ராஷ்மிகா. ஆனால், பூஜா ஹெக்டே அந்த வாய்ப்பைக் கொத்திக்கொண்டு போக, காத்திருந்து காரியம் சாதித்திருக்கிறார் ராஷ்மிகா. ‘விஜய்யின் அடுத்த படத்திலும் நிச்சயம் நான்தான் ஜோடி’ என அம்மணி விடுகிற சவால்தான் அத்தனை பேரையும் ஆச்சர்யப்படுத்துகிறது.

விக்ரம் பிரபுவுக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது ‘டாணாக்காரன்.’ போலீஸ் பயிற்சி பள்ளிகளில் நடக்கும் மீறல்களை அப்பட்டமாக்கியவிதத்தில் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறார் இயக்குநர் தமிழ். சில காலம் காவல்துறையில் பணியாற்றி, பிறகு திரைத்துறைக்கு வந்த தமிழ், வெற்றிமாறனின் படங்களில் தொடர்ந்து பணியாற்றினார். வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தில் சூரிக்கு போலீஸ் உடல்மொழியைக் கற்றுக் கொடுத்தவர் இதே தமிழ்தான்! ‘டாணாக்காரன்’ நிச்சயம் கவனிக்கவைக்கும் எனக் கணித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ஏற்கெனவே தமிழுக்கு அட்வான்ஸ் கொடுத்து அடுத்த படத்தைத் தயாரிக்க ரெடியாகிவிட்டார்.

ஷில்பா மஞ்சுநாத்
ஷில்பா மஞ்சுநாத்
ஷில்பா மஞ்சுநாத்
ஷில்பா மஞ்சுநாத்

ஒடுக்கப்பட்டவரின் பிணத்தை சாலை வழியே எடுத்துச் செல்லத் தடைவிதித்த ஆதிக்க மனப்பான்மையை எதிர்த்து ‘பறை’ என்கிற தலைப்பில் திங்க் மியூசிக் நிறுவனம் பாடல் வெளியிட்டது. ஷான் ரோல்டன் இசையில் ரிலீஸான இந்தப் பாட்டுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். இந்நிலையில் பாடலுக்கு எதிராகக் கிளம்பிய சிலர், திங்க் மியூசிக் நிறுவனத்தில் பணியாற்றும் சந்தோஷ் என்பவரை போனிலேயே வசவித் தீர்க்கத் தொடங்கினார்கள். “சமூகத் தேவைக்கான பாடல்களைத் தொடர்ந்து செய்யணும்கிற எண்ணத்தைத்தான் இத்தகைய எதிர்ப்புகள் ஏற்படுத்தியிருக்கின்றன” எனத் துணிவோடு சொல்கிறது திங்க் மியூசிக் நிறுவனம்.

‘பெரிய இயக்குநர்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன்’ எனத் தெளிவாக முடிவெடுத்துவிட்டார் தனுஷ். ‘மாறன்’ படத்தின் தோல்வி தனுஷை வெகுவாக பாதித்துவிட்டது. அதனால் உடனடியாக வெற்றிமாறன் படத்தில் நடிக்க விரும்பினார் தனுஷ். சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படத்தைத் தொடங்கவே வெற்றிமாறனுக்கு நேரம் சரியாக இருக்கிறது. அதனால், ‘சிறுத்தை’ சிவா, ஹெச்.வினோத், நெல்சன், லோகேஷ் கனகராஜ் என டாப் லெவலில் இருக்கும் இயக்குநர்களை லிஸ்ட் எடுத்து அவர்களிடம் கதை கேட்கத் தீவிரமாகிவிட்டார் தனுஷ்.

உஷ்...

கவனம் ஈர்த்த சிறு பட்ஜெட் படத்தை ஆஸ்கர் பரபரப்பு வரை கொண்டு போனார் நயன நடிகை. அதே இயக்குநரை வைத்து அடுத்த படத்தைத் தொடங்கும் முடிவிலும் இருந்தாராம். என்ன காரணமோ, சம்பந்தப்பட்ட இயக்குநர் வேறு நிறுவனத்தைத் தேடிப் போய்விட, ‘இதுதான் நன்றிக்கடனா?’ என ஆதங்கப்பட்டாராம் நடிகை. #கிளிக்கு றெக்கை மொளச்சுடுச்சு....

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism