அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

தனிமையில் பாரதிராஜா

* ஆண்டுக்கு மினிமம் ஒரு படம் என்பது அஜித்தின் திட்டம். கடந்த ஆண்டு மட்டும் ‘விஸ்வாசம்’, ‘நேர்கொண்ட பார்வை’ என இரண்டு படங்கள் வெளியானது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ‘வலிமை’ ரிலீஸ் என்பதுதான் திட்டம். ஆனால், கொரோனா பிரச்னைகளால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருப்பதுடன், ஏற்கெனவே 50 சதவிகிதப் படப்பிடிப்பு மட்டுமே முடிந்திருப்பதால் இந்த ஆண்டு ‘வலிமை’ ரிலீஸாக வாய்ப்பில்லை. 2021-ம் ஆண்டு பொங்கலுக்குத்தான் ‘தல’ தரிசனம் இருக்கும் என்கிறார்கள்.

* ‘மாஸ்டர்’ ஹீரோயின் மாளவிகா மோகனன்தான் தனுஷின் அடுத்த பட ஹீரோயின். ‘மாஃபியா’ இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷுடன் கமிட்டாகியிருக்கிறார் மாளவிகா. இசை ஜி.வி.பிரகாஷ். சுமார் ஒரு மாதத்தில் ஷூட்டிங் தொடங்கலாம் என்கிறார்கள்.

* பாரதிராஜாவைச் சுற்றி எப்போதும் ஒரு நட்புக்கூட்டம் குழுமி இருக்கும். சினிமாவுக்கு வந்த நாளிலிருந்து எப்போதும் கூட்டத்துடன் இருப்பவர், இப்போது சென்னை நீலாங்கரை வீட்டில் தனிமையில் இருக்கிறார். தன் பங்களாவில் உள்ள முதல்மாடிதான் தற்போதைக்கு அவரது உலகம். புத்தகங்கள் படிப்பது, படங்கள் பார்ப்பது என தனிமையைக் கழிக்கிறார். யாராவது உதவிக்கு வரட்டுமா எனக் கேட்டால்கூட `யாரும் என்னைப் பார்க்க வர வேண்டாம்... நீங்கள் உங்கள் வீட்டுக்குள்ளேயே இருங்கள்’ என்கிறாராம் இயக்குநர் இமயம்.

* `கனடாவில் படிக்கும் மகன் ஜேசன் சஞ்சய்க்கு கொரோனா’ என சிலர் வதந்தி கிளப்பியதில், விஜய் ரொம்பவே அப்செட். ஜேசன் சஞ்சய் மிகப் பாதுகாப்பாக விஜய்யின் மனைவி சங்கீதாவின் உறவினர் வீட்டில் இருக்கிறாராம். “சஞ்சய்க்கு எந்தப் பிரச்னையும் இல்லை. தயவுசெய்து வதந்தி பரப்பாதீர்கள்” என்கிறது விஜய் குடும்பம்.

ஸ்ருதிஹாசன் - மாளவிகா மோகனன்
ஸ்ருதிஹாசன் - மாளவிகா மோகனன்

* சோஷியல் மீடியாக்களில் மக்களை மகிழ்விக்கும் நடிகைகள் லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருக்கிறார் ஸ்ருதிஹாசன். சமையல், ஃபிட்னஸ், விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வந்த ஸ்ருதி, தற்போது பிரபல பாடல்களை கொஞ்சம் ட்யூன் மாற்றி பாடி அசத்திவருகிறார். லேட்டஸ்ட்டாக கமல்ஹாசனின் புகழ்பெற்ற பாடலான ‘தென்பாண்டிச் சீமையிலே...’ பாடலை ஸ்ருதி தன் ஸ்டைலில் பாட, ஏகப்பட்ட லைக்ஸ்!