Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஸ்ரீநிதி ஷெட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீநிதி ஷெட்டி

ஜெய் பீம்’ தொடங்கி `டாணாக்காரன்’ வரை இன்றைக்கு அசத்துகிறது தமிழ் சினிமா. அந்த வரிசையில் நிச்சயம் ஆதார் படமும் இருக்கும்

மிஸ்டர் மியாவ்

ஜெய் பீம்’ தொடங்கி `டாணாக்காரன்’ வரை இன்றைக்கு அசத்துகிறது தமிழ் சினிமா. அந்த வரிசையில் நிச்சயம் ஆதார் படமும் இருக்கும்

Published:Updated:
ஸ்ரீநிதி ஷெட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீநிதி ஷெட்டி

‘கே.ஜி.எஃப் -2’ மாஸ் மசாலாவாகப் பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது. கே.ஜி.எஃப் முதல் பாகத்தைத் தமிழில் அப்போது யாரும் ரிலீஸ் செய்ய முன்வராதபோது, விஷாலை அணுகினார் நடிகர் யஷ். நட்புக்காக விஷால் ஃபிலிம் ஃபேக்டரி பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய, படம் வசூல் மழை பொழிந்தது. நட்பின் அடிப்படையில் இரண்டாம் பாகத்தையும் விஷாலுக்கே கொடுக்க நினைத்தது கே.ஜி.எஃப் குழு. ஆனால், எஸ்.ஆர்.பிரபுவின் டிரீம் வாரியர்ஸ் நிறுவனம், நினைத்துப் பார்க்க முடியாத தொகையை விலையாக வைக்க, அவர்களிடமே தமிழ்நாடு ரிலீஸ் உரிமை கொடுக்கப்பட்டது. ‘பீஸ்ட்’ பரபரப்பைத் தாண்டி, பிய்த்துக்கொண்டு வசூல் மழை கொட்ட, உற்சாகத்தில் மிதக்கிறது டிரீம் வாரியர்ஸ் நிறுவனம்!

ஸ்ரீநிதி ஷெட்டி
ஸ்ரீநிதி ஷெட்டி
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

கருணாஸ் நடிப்பில், ராம்நாத் இயக்கத்தில் உருவாகும் ‘ஆதார்’ படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழாவில், “ `ஜெய் பீம்’ தொடங்கி `டாணாக்காரன்’ வரை இன்றைக்கு அசத்துகிறது தமிழ் சினிமா. அந்த வரிசையில் நிச்சயம் ஆதார் படமும் இருக்கும்” என்றார் இயக்குநர் இரா.சரவணன். அதன் பிறகு பேசவந்த அருண் பாண்டியன், “தமிழ் சினிமா அந்த அளவுக் கெல்லாம் முன்னேறவில்லை” என பதிலடி கொடுக்க, அவரோடு மல்லுக்குப் போய்விட்டார் அமீர். “தமிழ் சினிமாவின் தரத்தை யாரும் குறைசொல்ல முடியாது” என அமீர் பேச, “நான் இரா.சரவணனின் கருத்துக்குத்தான் பதில் சொன்னேன். செத்தாலும் தமிழ் சினிமாவில்தான் சாவேன்” என்றார் அருண் பாண்டியன். நிகழ்ச்சி முடிந்தும் அமீருக்கும் அருண் பாண்டியனுக்கும் இடையேயான பஞ்சாயத்து முடியவில்லை!

விஜய்யின் ‘பீஸ்ட்’, ஆன்லைன் ஆட்களால் ரொம்பவே விமர்சனத்துக்கு உள்ளானது. படத்துக்கு எதிராக இவ்வளவு நெகட்டிவ் விமர்சனங்கள் எப்படி வந்தன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தச் சொல்லியிருக்கிறார் விஜய். சில நடிகர்களின் ரசிகர்கள் திட்டமிட்டு ‘பீஸ்ட்’டுக்கு எதிராக வரிந்துகட்டி இறங்கி துவம்சம் செய்துவிட்டதாக முதற்கட்டத் தகவல் விஜய்க்குச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான பதிவுகளை அதற்கு ஆதாரமாகக் காட்டியிருக்கிறாராம் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஸ். நடிகர்களுக்கிடையே மிகப்பெரிய மோதலாக இந்த விவகாரம் மாறவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்!

உஷ்...

ஜவுளிக்கடைக்காரர் நடிக்கும் படத்தின் மொத்த வேலைகளும் முடிந்து பாடல் வெளியான நிலையில், இன்னும் சில நாள்கள் ஷூட்டிங் போக வேண்டும் என்கிறார்களாம் படத்தின் இரட்டை இயக்குநர்கள். “ரெண்டு வருஷமா ஷூட்டிங் நடத்தி இன்னும் முடிக்கலையா?” என ஜவுளிக்கடைக்காரரே கொந்தளித்துவிட்டாராம். படத்தின் பட்ஜெட்டும் திட்டமிட்டதைக் காட்டிலும் எங்கேயோ போய்விட்டதாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism