Published:Updated:

மிஸ்டர் மியாவ்

கங்கனா ரனாவத் - காஜல் அகர்வால்
பிரீமியம் ஸ்டோரி
News
கங்கனா ரனாவத் - காஜல் அகர்வால்

ஜெயலலிதா பயோபிக்கான ‘தலைவி’ கடுமையான நெருக்கடியில் இருக்கிறது...

* இந்தியில் செம ஹிட் அடித்த படம் ‘ஆர்ட்டிக்கிள் 15’. அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடித்த இந்தப் படம், தமிழில் ரீமேக் ஆகிறது. உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். ‘கனா’ படத்தை இயக்கிய அருண்ராஜாகாமராஜ் இயக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

* கமல்ஹாசனின் ‘இந்தியன்-2’, ‘தலைவன் இருக்கின்றான்’ படங்களே இன்னும் முடிவடையாத நிலையில், ‘வேட்டையாடு விளையாடு-2’ படத்துக்கான கதை விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. கமல்ஹாசனுடன் முதல் ரவுண்ட் கதை விவாதத்தை முடித்துவிட்டார் கெளதம் மேனன். விரைவில் அதிகாரபூர்வ தகவல் வரும் என்கிறார் கெளதம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

* கொரோனா விவகாரத்தில் நடிகைகள் பலரும் சத்தமில்லாமல் இருக்கும் நிலையில், தொடர்ந்து பல உதவிகளைச் செய்துவருகிறார் காஜல் அகர்வால். திரைப்படத் தொழிலாளர் களுக்கு நிதி உதவிகளை அளித்திருப்பதோடு, மும்பையில் தன் வீட்டு அருகே இருக்கும் ஏழை மக்களுக்கும் பல உதவிகளைச் செய்துவருகிறார்.

கங்கனா ரனாவத் - காஜல் அகர்வால்
கங்கனா ரனாவத் - காஜல் அகர்வால்

* தெலுங்கில் ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ படத்தின் ரீமேக் உரிமையை வாங்க பலத்த போட்டி நிலவுகிறது. அநேகமாக இந்தப் போட்டியில் சிவகார்த்திகேயன் வெற்றிபெறலாம்.

* கொரோனா லாக்டெளன் சூழலால் பல சிக்கல்களைச் சந்தித்துவருகிறது சினிமா துறை. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்துவரும் ஜெயலலிதா பயோபிக்கான ‘தலைவி’ கடுமையான நெருக்கடியில் இருக்கிறது. ஜெயலலிதாவின் இளமைக்கால போர்ஷன் ஷூட்டிங் முடிந்துவிட்டதால், தற்போது முதலமைச்சர் போர்ஷனுக்காக அதிக எடை போட்டிருக்கிறார் கங்கனா. இப்போது எதிர்பார்த்ததுபோல் ஷூட்டிங் நடக்காததால் எடையைக் குறைப்பதா, வேண்டாமா என்கிற மன உளைச்சலில் இருக்கிறாராம்.