அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

லட்சுமி மேனன் - தமன்னா
பிரீமியம் ஸ்டோரி
News
லட்சுமி மேனன் - தமன்னா

நடிகைகள் 2 லட்சம், 5 லட்சம் என கொஞ்சம் கொஞ்சமாக நிதி கொடுத்துக்கொண்டிருக்க, தமன்னா மட்டும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறார்

* ‘கும்கி’ படம் மூலம் பிரபலமாகி தமிழில் ஒரு ரவுண்டு வந்தவர் நடிகை லட்சுமி மேனன். பள்ளியில் படிக்கும் போதே நடிக்க வந்துவிட்ட இவர், இடையில் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்தினார். இப்போது மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறார். ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ படங்களை இயக்கிய முத்தையாவின் படத்தில்தான் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் லட்சுமி மேனன்.

* கொரோனா பிரச்னைகள் எப்போது முடியும், ஷூட்டிங்கை எப்போது தொடங்குவது என ஒரே பரபரப்பில் இருக்கிறது சின்னத்திரை. இதற்கிடையே, ‘ஷூட்டிங்கை மே 5-ம் தேதி முதல் ஆரம்பிக்கச் சொல்லி டிவி சேனல் கட்டாயப்படுத்துகிறது’ என குஷ்பு சொல்ல, ராதிகா அதை மறுத்திருக்கிறார். ஃபெப்சி தலைவர் செல்வமணியோ, `நடிகர், நடிகைகளுக்கு யாரும் மாஸ்க் அணிந்துகொண்டு மேக்கப் போட முடியாது. அவர்கள் அருகில் நின்றுதான் மேக்கப்மேன்கள் ஒப்பனை செய்ய வேண்டும். சின்ன லெவலில் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்றால்கூட, ஸ்பாட்டில் 40 பேர் தேவைப்படுவார்கள். அதனால் சினிமா மற்றும் டிவி ஷூட்டிங் என்பது, கொரோனா முற்றிலும் முடியும் வரை சாத்தியமில்லை’ என்று சொல்லியிருக்கிறார்.

* கொரோனா நிதியாக யார் யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்ற கணக்குதான் கோடம்பாக்கத்தில் நடந்துகொண்டிருக்கிறது. நடிகைகள் 2 லட்சம், 5 லட்சம் என கொஞ்சம் கொஞ்சமாக நிதி கொடுத்துக்கொண்டிருக்க, தமன்னா மட்டும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறார். ‘தெலுங்கு சினிமா அமைப்புக்கு கொரோனா நிதி கொடுத்த தமன்னா, தமிழ் சினிமா யூனியனுக்கு எந்த நிதியும் கொடுக்கவில்லை’ என்பதுதான் சர்ச்சை. ‘தமிழ்ப் படங்கள்தானே அவருக்கு அடையாளம் தந்தன’ எனக் கேள்வி எழுப்புகிறது கோடம்பாக்கம்.

லட்சுமி மேனன் - தமன்னா
லட்சுமி மேனன் - தமன்னா

* ‘பாவம் சிவகார்த்திகேயன்’ என வருந்துகிறார்கள் அவரின் நண்பர்கள். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படம் ரிலீஸின்போதே கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கியது. போஸ்கோ என்பவர், ‘இது என்னுடைய கதை’ என நீதிமன்றத்தில் வழக்கு தொடர, நீதிமன்றமும் ‘ஒற்றுமை தெரிகிறது’ என இடைக்கால தீர்ப்பளித்தது. இதை காரணம்காட்டி அமேசான் தனது தளத்திலிருந்து ‘ஹீரோ’ படத்தை நீக்கிவிட்டது. தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப முடியாத சூழல். இதனால் டிவி, ஓ.டி.டி ரைட்ஸால் மட்டும் கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் நஷ்டம் என்கிறார்கள். இப்போது போஸ்கோவிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் நடக்கின்றனவாம்.

* ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தை ஆகஸ்ட் 15-ம் தேதி ரிலீஸ் செய்வதுதான் திட்டமாக இருந்தது. ஆனால், கொரோனா பிரச்னையால் ஷூட்டிங்கே 50 சதவிகிதம்தான் நிறைவடைந்திருக்கிறது. படத்தின் வில்லன் யார் என்பதே இன்னும் முடிவாகவில்லை. கன்னட நடிகர் சுதீப் ‘கால்ஷீட் இல்லை’ எனச் சொல்ல, தெலுங்கு நடிகர் கோபிசந்தை அணுகினார் இயக்குநர் சிவா. ஆனால், ரஜினியின் சாய்ஸோ சுதீப்பாக இருக்கிறது. இதனால் படக்குழு குழப்பத்தில் இருக்கிறது.