* ‘ஆண் தேவதை’ படத்துக்குப் பிறகு வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவிருக்கிறார் இயக்குநர் தாமிரா. ‘தி பர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த வெப் சீரிஸின் லீட் ரோலில் சத்யராஜ் நடிக்கிறார். தவிர, அதில் சீதா, சுகன்யா ஆகியோரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
* ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வேட்டையாடு விளையாடு 2’ படத்தை எடுக்க கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. அந்தக் கதையில் நடிக்க அனுஷ்காவை அணுகியுள்ளனராம். ஏற்கெனவே, கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு ஹீரோயின் சென்ட்ரிக் படத்தில் அனுஷ்கா நடிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

*ஜிம்முக்குப் போக முடியாததால் வீட்டிலேயே கிடைத்த பொருள்களைவைத்தும் மாடிப்படிகளில் ஏறி இறங்கியும் ஹீரோயின்கள் எமி ஜாக்சன், மஹிமா நம்பியார் ஆகியோர் வொர்க் அவுட் செய்துவருகின்றனர். இன்னும் சிலர், தங்கள் ஜிம் டிரெயினருடன் வீடியோ காலில் இருந்தபடி அவர்கள் சொல்வதைக் கேட்டு வொர்க் அவுட் செய்துவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS* தன் தந்தையுடன் வீட்டுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி நடைபயிற்சி செய்யும் வீடியோவை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால். தவிர, ‘இந்த 21 நாள்களில் புதிதாக சில நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொள்ள இருக்கிறேன்’ என்று சொல்லும் இவர், ஆன்லைன் கோர்ஸ்கள் சிலவற்றில் சேர்ந்துள்ளாராம்.
* ஊரடங்கு அமலில் இருப்பதால், ஒவ்வொரு நடிகையும் வீட்டில் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுவருகின்றனர். அதில் பலர் சமையலில் அதிக கவனம் செலுத்திவருகின்றனர். ஸ்ருதிஹாசன் செய்த கேக், ப்ரீத்தி ஜிந்தா செய்த மசால்தோசை, ஹூமா குரேஷி சமைத்த சிக்கன் குழம்பு என அனைத்தும் அவர்களின் சமூக வலைதளப் பக்கங்களின் உள்ளன.

*அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார் நடிகர் கார்த்தி. ‘பொன்னியின் செல்வன்’, ‘சுல்தான்’, பி.எஸ்.மித்ரன் இயக்கும் படம் எனப் பல படங்கள் கார்த்திக்கு இருப்பதால் தனது இயக்கத்தில் கார்த்தி நடிக்கத் தாமதமாகும் என்பதால், அதற்குள் வேறொரு படத்தை இயக்க முடிவுசெய்துவிட்டாராம் அருண்ராஜா காமராஜ். அந்தப் படத்தின் நாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கிறார்.

* ‘குயின்’ வெப் சீரிஸில் நடித்த அஞ்சனா ஜெயப்பிரகாஷ் மலையாளத்தில் ஃபஹத் பாசிலுடன் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜி வெங்கடேஷ், ‘பியாண்ட் தி கிளவுட்ஸ்’ படத்தில் நடித்த த்வானி ராஜேஷ் ஆகியோரும் உள்ளனர். படத்தை அகில் சத்யன் இயக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஃபஹத் பாசிலுக்கு இந்தப் படத்தில் முழுக்க முழுக்க ஹியூமரஸான கேரக்டராம்.