Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மீண்டும் சிக்கலில் சிக்கியிருக்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

மிஸ்டர் மியாவ்

மீண்டும் சிக்கலில் சிக்கியிருக்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

* ‘வெற்றிமாறன் அடுத்து இயக்கப்போவது சூரியின் படமா, சூர்யாவின் படமா?’ என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் எழத் தொடங்கிவிட்டது. சூர்யாவின் பிறந்தநாளுக்காக ‘வாடிவாசல்’ ஸ்பெஷல் போஸ்டரை வெற்றிமாறன் வெளியிட்டதுதான் இந்தப் பேச்சு எழக் காரணம். ‘சூர்யாவுக்காக சூரி படம் தள்ளிப்போகலாம்’ என்றும் பேசப்பட்டது. இப்போது அதற்கு விடை கிடைத்துவிட்டது. ஊரடங்கு முடிந்ததும், சூரி நடிக்கும் படத்தைத்தான் இயக்கப்போகிறார் வெற்றிமாறன். அந்தப் படம் முடிந்ததும்தான் ‘வாடிவாசல்!’

* பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராகப் போராடிய அல்லூரி சீதாராம ராஜு, ஆந்திராவின் நிலப்பிரபுகளுக்கு எதிராகப் போராடிய பழங்குடி இனத்தலைவர் கொமாரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாறே ராஜமெளலி இயக்கிவரும் ‘RRR’ படம். 2021, பொங்கல் ரிலீஸுக்குத் திட்டமிடப்பட்ட இந்தப் படம், 80 சதவிகிதப் பணிகள் முடிவடைந்த நிலையில் கொரோனாவால் நிற்கிறது. ‘அக்டோபரில் ஷூட்டிங் நடத்த அனுமதி கிடைத்தால், பாடல்களை ஷூட் செய்யாமல் படத்தை மட்டும் முடித்து பொங்கலுக்கு வெளியிடலாம். இல்லையென்றால், ஏப்ரல்’ என பிளானை மாற்றியிருக்கின்றனர்.

ரேஷ்மா
ரேஷ்மா

* மீண்டும் சிக்கலில் சிக்கியிருக்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. ராமநாதபுரம் நிதி நிறுவன மோசடியில் ஞானவேல் ராஜாவுக்கும் பங்கிருப்பதாகப் புகார்கள் கிளம்ப, அவரை ஆஜராகச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதற்கிடையே, ‘அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்த நீதிமணி என்பவர் ‘மகாமுனி’ படத்தின் தியேட்டர் உரிமையை 6.25 கோடி ரூபாய்க்கு வாங்கினார். அதற்கு இதுவரை 2.30 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்திருக்கிறார்’ என்று சொல்லும் ஞானவேல் ராஜா, ‘அந்த நிதி நிறுவனத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று மறுத்திருக்கிறார். நீதிமன்றம்தான் உண்மை என்ன என்பதை உலகுக்குச் சொல்ல வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ரேஷ்மா
ரேஷ்மா

* `பிக் பாஸ்’ சீஸன் - 3 பங்கேற்பாளர் நடிகை ரேஷ்மா. நடிகர் பாபி சிம்ஹாவின் அக்காவான ரேஷ்மாவுக்கு, பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால், இப்போது லாக்டெளனிலும் வாரத்துக்கு ஒரு போட்டோஷூட் எடுத்து கிளாமர் படங்களை ஆன்லைனில் அள்ளித் தெளிக்கிறார் ரேஷ்மா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism