* சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘சந்திரமுகி 2’ படத்தை பி.வாசு இயக்க, ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கிறார். இந்தக் கதை வேட்டையன் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தியது என்கிறார்கள். சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை அணுகியிருக்கிறது படக்குழு. அக்ஷய் குமாரை வைத்து லாரன்ஸ் இயக்கிய ‘லக்ஷ்மி பாம்’ படம் ஹாட் ஸ்டாரில் வெளியாகவிருக்கிறது. அதில் கியாராதான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

* டோலிவுட்டில் அடுத்தடுத்து திருமண வைபோகங்கள் நடக்கவிருக்கின்றன. துபாயில் பிரமாண்டமாக நடத்த திட்ட மிட்டிருந்த நடிகர் நிதினின் திருமணம், அவரின் நெருங்கிய சொந்தத்தின் முன்னிலையில் ஹைதராபாத்தில் எளிமை யாக நடைபெற்றது. வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி நடிகர் ராணா-மிஹீகா பஜாஜ் திருமணம் நடக்கவிருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து, நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளும் நடிகையுமான நிஹாரிகாவின் நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

* விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் ஆகியோரை வைத்து இயக்குநர் சுசீந்திரன் 1980-களில் நடக்கும் த்ரில்லர் கதை ஒன்றை இயக்கத் தயாராக இருந்தார். அதற்குள், லாக்டெளன் வந்துவிட்டது. அந்தப் படம் ஆரம்பிப்பதற்குள் ஜெய், பாரதிராஜா, ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோரை வைத்து கொரோனா காலப் பின்னணியில் கிராமத்துக் கதையை படமாக்கவிருக்கிறார் சுசீந்திரன். விரைவில் ஷூட்டிங் ஆரம்பமாகும் என்கிறார்கள்!

* கெளதம் மேனன், வெங்கட் பிரபு, பா.ரஞ்சித், ஏ.எல்.விஜய், ராஜேஷ்... இந்த ஐந்து இயக்குநர்கள் சேர்ந்து காதலை மையமாக வைத்து ஆந்தாலஜி வெப் சீரீஸ் ஒன்றை எடுக்கத் திட்டமிட்டிருக்கின்றனர். அதில் விஜய் இயக்கும் பகுதியில் மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

* லாக்டெளனில் விதவிதமான காஸ்ட்யூம்களில் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் அள்ளி வீசிவருகிறார் நடிகை மாளவிகா மோகனன். அதிலும் இவர் பச்சை நிற வேஷ்டியில் கொடுத்த போஸ் செம வைரல். தனுஷ் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்னது மட்டுமல்லாமல், ‘யாராவது உங்களையும் என்னையும் சேர்த்துவைத்து ஒரு படம் இயக்குவார்கள் என நம்புகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.