Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

கெளதம் மேனன் இயக்கத்தில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் உருவாகும் ஆந்தாலஜி வெப் சீரிஸ் ஒன்றில் ரீது வர்மா நடிக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

கெளதம் மேனன் இயக்கத்தில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் உருவாகும் ஆந்தாலஜி வெப் சீரிஸ் ஒன்றில் ரீது வர்மா நடிக்கிறார்.

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

*அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் அடிக்கடி நடித்துவரும் ப்ரியா ஆனந்த்தின் கைவசம் தற்போது ‘சுமோ’ மட்டுமே உள்ளது. அதனால், ஓ.டி.டி தளங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார். அப்படி இந்தியில் உருவாகும் ‘Simple Murder’ என்ற வெப் சிரீஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

* சாக்‌ஷி அகர்வால், பார்வதி நாயர்... இந்த இருவருக்கும் இன்ஸ்டாகிராமில் கடுமையான போட்டி நிலவுகிறது. தினமும் விதவிதமான காஸ்ட்யூம்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதுதான் தங்களின் தலையாய பணியாக வைத்திருக்கிறார்கள்.

 பார்வதி நாயர்
பார்வதி நாயர்

* மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்து வெளியான ‘ஜோசப்’ திரைப்படம் அதிகம் பேசப்பட்டது. அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை பாலா தயாரிக்க, ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறார். இதில் அவருக்கு மனைவியாக பூர்ணா நடித்திருக்கிறார். இன்னும் நான்கு நாள்கள்தான் ஷூட்டிங் மீதம் இருக்கிறதாம். ஜெயலலிதாவின் பயோபிக்கான ‘தலைவி’ படத்தில், எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி கதாபாத்திரத்திலும் பூர்ணாதான் நடிக்கிறார்.

* கெளதம் மேனன் இயக்கத்தில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் உருவாகும் ஆந்தாலஜி வெப் சீரிஸ் ஒன்றில் ரீது வர்மா நடிக்கிறார். ஹீரோயினை மையப்படுத்திய இந்த வெப் சீரிஸுக்கான படப்பிடிப்பும் சத்தமேயில்லாமல் நிறைவடைந்துவிட்டதாம். இவர்தான் கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ஹீரோயின் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமேஸான் தயாரிக்கும் இந்த ஆந்தாலாஜி வெப் சீரிஸில் மற்ற இயக்குநர்கள் யார் யார் என்ற செய்தி விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

* வொர்க்-அவுட், கணவருக்கு ஹேர் கட் ஆகியவற்றை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுவந்த ப்ரீத்தி ஜிந்தா, தற்போது வீட்டில் காய்கறித் தோட்டம் அமைத்திருக்கிறார். அதில் விளைந்த குடமிளகாய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை அறுவடை செய்யும் வீடியோக்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

சாக்‌ஷி அகர்வால்
சாக்‌ஷி அகர்வால்

* ஒரு காலத்தில் ராம் கோபால் வர்மாவின் படங்களுக்கு இந்தியத் திரையுலகில் மிகுந்த அங்கீகாரம் கிடைத்தது. இன்றைய இயக்குநர்கள் பலருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறார். ஆனால், அவர் தற்போது எடுக்கும் படங்கள் அனைத்தும் சர்ச்சைக்குள்ளானவை. இந்த லாக்டெளனில் ‘க்ளைமேக்ஸ்’, ‘நேக்கடு’ உள்ளிட்ட அடல்ட் படங்களை இயக்கி அவருடைய ஆன்லைன் தளத்தில் வெளியிட்ட ராம் கோபால் வர்மா, பவன் கல்யாண் அரசியலில் தோற்றதைவைத்து ‘பவர் ஸ்டார்’ என்ற படத்தை இயக்கினார். அதற்கு பவன் கல்யாண் ரசிகர்கள் கோபப்பட்டு அவரது அலுவலகத்தை முற்றிகையிட்டுத் தாக்கினர். தற்போது, மறைந்த நடிகர் உதய் கிரணின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கவிருக்கிறார். சிரஞ்சீவி பெயரைக் களங்கப்படுத்தவே இதை இயக்குகிறார் என்று கூறப்படுகிறது.