Published:Updated:

மிஸ்டர் மியாவ்

அமலா பால்
பிரீமியம் ஸ்டோரி
அமலா பால்

‘என் மகன் நடிக்கும் படத்தில் நீங்கள் கெஸ்ட் ரோல் செய்தால் பெரிய கவனம் ஏற்படும்’ என்றார்.

மிஸ்டர் மியாவ்

‘என் மகன் நடிக்கும் படத்தில் நீங்கள் கெஸ்ட் ரோல் செய்தால் பெரிய கவனம் ஏற்படும்’ என்றார்.

Published:Updated:
அமலா பால்
பிரீமியம் ஸ்டோரி
அமலா பால்

சூர்யாவின் 40-வது படத்துக்கு ‘கண்ணபிரான்’ என்றுதான் தலைப்புவைக்க நினைத்திருந்தார் இயக்குநர் பாண்டிராஜ். ஆனால், அந்தத் தலைப்பைப் பல வருடங்களாக இயக்குநர் அமீர் பதிவுசெய்து வைத்திருக்கிறார். இது தெரியாமல், படத்தில் ‘கண்ணபிரான்’ எனத் தொடங்கும் பாடலும் பதிவு செய்யப்பட்டுவிட்டதாம். அமீரிடம் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்திருக்கிறார்கள். அமீர் அசைந்து கொடுக்க மறுக்க, ‘எதற்கும் துணிந்தவன்’ எனப் பெயர் வைத்துவிட்டார்கள்.

குலேபகாவலி’, ‘ஜாக்பாட்’ படங்களின் காமெடி பிடித்துப்போய், அந்தப் படத்தின் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ‘கோஷ்டி’ படத்தில் கமிட்டானார் காஜல் அகர்வால். படத்தின் ஷூட்டிங் கடகட வேகத்தில் நடப்பதைப் பார்த்து காஜலுக்கு பயங்கர ஆச்சர்யமாம். போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் காமெடியில் வெளுத்துவாங்கியிருக்கும் காஜலுக்கு, படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகளும் உண்டாம்.

நடிகர் விஜய் படிப்படியாக முன்னேறிவந்த காலகட்டத்தில், அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்திடம் ஓர் உதவி கேட்டார். ‘என் மகன் நடிக்கும் படத்தில் நீங்கள் கெஸ்ட் ரோல் செய்தால் பெரிய கவனம் ஏற்படும்’ என்றார். விஜயகாந்தும் மறுக்காமல் ‘பெரியண்ணா’ என்கிற படத்தில் விஜய்யுடன் நடித்து உதவினார். இப்போது விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் போதிய வெளிச்சத்துக்காகப் போராடிவருகிறார். இந்தநிலையில், தன் மகனின் வளர்ச்சிக்கு விஜய் உதவினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார் விஜயகாந்த். விஜய் கவனத்துக்குத் தகவல் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அட்டகாசமான கிராமத்துக் கதையைக் கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர் திருமுருகன். ‘எம்டன் மகன்’ அளவுக்குப் படத்தில் சென்டிமென்ட்டுக்கும் சிரிப்புக்கும் பஞ்சம் இல்லையாம். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. “கதை கேட்ட பத்தாவது நிமிடத்திலேயே படம் பண்ண சம்மதம் சொல்லிவிட்டேன்” எனச் சிலிர்க்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

மிஸ்டர் மியாவ்

தான் நடித்து ‘ஆஹா’ ஓ.டி.டியில் வெளியான ‘குடி எடமைத்தே’ ஹிட்டடித்ததில் அமலா பால் செம ஹேப்பி. லூசியா, யு டர்ன் புகழ் பவன் குமாரின் இயக்கத்தில் வந்த இந்தத் தெலுங்கு வெப் சீரிஸை ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். கையிலிருக்கும் படங்கள் தாமதமாவதால், இது மாதிரியான த்ரில்லர் வெப் சீரிஸ் கதைகளைக் கேட்கத் தயாராகி வருகிறார் அமலா பால்.

எக்ஸ்க்ளூசிவ்: ‘சார்பட்டா’ படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 27 கோடி ரூபாய். அமேசான் தளம் 40 கோடி ரூபாய்க்குப் படத்தை வாங்கியது. படத்துக்கான ரெஸ்பான்ஸ் அட்டகாசமாக அமைய, ‘சார்பட்டா’ படத்தின் இதர ஏரியாக்களை வெப் சீரீஸாகப் பண்ண பா.இரஞ்சித்திடம் அக்ரிமென்ட் போட்டிருக்கிறது அமேசான் தளம். பாக்ஸிங் தொடங்கி அரசியல் வரையிலான அத்தனை பகுதிகளையும் இந்த சீரீஸில் கொண்டுவருகிற திட்டத்தில் இருக்கிறார் பா.இரஞ்சித்.

உஷ்

அடுத்த வருடத்துக்குள் நடிப்பு, சம்பாதிப்பு எனத் தன்னிறைவு அடைந்துவிட நினைக்கிறார் நம்பர் நடிகை. தயாரித்து வைத்திருந்த படங்களை வந்த விலைக்கு ஓடிடி-க்குத் தள்ளிவிட்டு, ஒரே நேரத்தில் மூன்று படங்களின் ஷூட்டிங்குக்குத் தயாராகிவிட்டார். அடுத்த வருடம் திருமணத்தை முடிக்கத் திட்டமிட்டிருப்பதால்தான் இந்தத் தீவிரமாம். # நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism