Published:Updated:

மிஸ்டர் மியாவ்

சமந்தாவின் கைவசம் ‘ஃபேமிலி மேன் சீஸன் 2’ வெப் சீரிஸ், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் ஆகியவை உள்ளன.

பிரீமியம் ஸ்டோரி

* இந்தியத் திரையுலகமே கொரோனா ஊரடங்கால் முடங்கிக்கிடக்க... ஊரடங்குக்குப் பிறகு முதன்முறையாக ‘பெல்பாட்டம்’ படத்தின் படப்பிடிப்புக்காக லண்டனுக்குச் சென்றிருக்கிறது அக்‌ஷய் குமார் அண்ட் டீம். அக்‌ஷய் குமாருடன் லாரா தத்தா, ஹூமா குரேஷி ஆகியோர் நடிக்கின்றனர்.

* ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமான ஜூலி, `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். பிறகு, டி.வி-யில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர், ‘அம்மன் தாயி’, ‘நீட்’ காரணமாக உயிரிழந்த அனிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் என அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார். ஆனால், ஒரு படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில், வெஸ்டர்ன் லுக்கில் விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி வெளியிட்டுவருகிறார் அம்மணி.

* `பிக் பாஸ்’ பிரபலமான யாஷிகா ஆனந்த் நடிப்பில் ‘ஜாம்பி’ படம் வெளியானது. மஹத்துடன் ‘இவன்தான் உத்தமன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஆரவ் நடித்துள்ள ‘ராஜபீமா’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருக்கிறார். தவிர, தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடிக்கும் ‘சிறுத்தை சிவா’ என்ற படத்திலும் நாயகி யாஷிகாதான்.

யாஷிகா
யாஷிகா

* சமந்தாவின் கைவசம் ‘ஃபேமிலி மேன் சீஸன் 2’ வெப் சீரிஸ், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் ஆகியவை உள்ளன. இந்த லாக்டெளனில் கார்டனிங், சமையல், ஆன்லைன் கோர்ஸ் எனத் தன்னை பிஸியாகவே வைத்திருக்கிறார் சமந்தா. அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடும் சமந்தா மேற்கண்ட வேலைகளில் பிஸியாக இருந்ததால், சில நாள்களாகத் தனது புகைப்படங்கள் எதையும் பதிவிடவில்லை. இதனால், அவரை ஃபாலோ செய்யும் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தார்கள். இந்தநிலையில், மஞ்சள் நிற உடையில் அவர் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டவுடன், அவை தீயாகப் பற்றிக்கொண்டு வைரலாகத் தொடங்கிவிட்டன.

வாணி போஜன்
வாணி போஜன்

* விஜய் தேவரகொண்டா தயாரிப்பில், ‘மீக்கு மாத்திரமே செப்தா’ தெலுங்குப் படத்தின் மூலம் தன் சினிமா கரியரைத் தொடங்கினார் வாணி போஜன். ‘ஓ மை கடவுளே’ படமும் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. இந்தநிலையில் மேடத்தின் கைவசம் அடுத்தடுத்த படங்கள் வரிசைகட்டுகின்றன. வைபவ்வுடன் இவர் நடித்த ‘லாக்கப்’ ஜீ5 தளத்தில் வெளியாகவிருக்கிறது. தவிர, அதர்வாவுடன் ஒரு படம், விக்ரம் பிரபுவுடன் ஒரு படம் என வரிசை நீள்கிறது. இந்த இரண்டு படங்களும் தமிழ்-தெலுங்கு பைலிங்குவலாக இருக்கும் என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு