அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

இனியா
பிரீமியம் ஸ்டோரி
News
இனியா

கடந்த வருடமே திருமணத்தை நடத்த நயனும் விக்னேஷ் சிவனும் திட்டமிட்டிருந்தார்களாம்.

‘அண்ணாத்த’ படம், பக்கா சென்டிமென்ட் கதையாக வொர்க்-அவுட்டாகியிருப்பதால், அடுத்து ஆக்‌ஷன் கதையைக் கையிலெடுக்கும் முடிவில் இருக்கிறாராம் ரஜினி. வெளிநாடு போய் உடல்ரீதியான பரிசோதனையை முடித்துவந்த ரஜினி, அடுத்த படத்தை விரைவில் தொடங்கவிருக்கிறாராம். சத்யஜோதி, சன் பிக்சர்ஸ், ஏ.ஜி.எஸ் நிறுவனங்கள் ரஜினியின் தேதிக்காகத் தவம்கிடக்கின்றன. சமீபத்தில் ரஜினியைச் சந்தித்துக் கதைசொன்ன இயக்குநர் யார் தெரியுமா? அஜித்குமாரின் ‘வலிமை’ படத்தை இயக்கிவரும் இயக்குநர் ஹெச்.வினோத்.

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக மனம் திறந்திருக்கும் நயன்தாரா, கொரோனா நெருக்கடியால்தான் திருமணத்தைத் தள்ளிப்போட்டிருக்கிறாராம். கடந்த வருடமே திருமணத்தை நடத்த நயனும் விக்னேஷ் சிவனும் திட்டமிட்டிருந்தார்களாம். கேரளாவில் திருமணம், சென்னையில் வரவேற்பு என மிக பிரமாண்டமான முறையில் திட்டங்கள் வகுக்கப்பட்ட நிலையில்தான், கொரோனா தீவிரமானது. ஒரு வருடமாகியும் நிலைமை சரியாகாததால், இந்த வருடமே மிக எளிமையான முறையில் திருமணத்தை நடத்தப் போகிறார்களாம்.

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஷூட்டிங் திருச்செந்தூர் பகுதியில் நடக்கிறது. தீவிர முருக பக்தரான சிம்பு, ‘ஷூட்டிங் நடத்த முறையான அனுமதி வாங்குங்கள். கொரோனா பரவல் நேரத்தில் மக்களுக்கோ, பக்தர்களுக்கோ தொந்தரவாகிவிடக் கூடாது’ எனச் சொல்லி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமாரிடம் படக்குழுவை அனுப்பி வைத்தாராம். காவல்துறையின் அனுமதி கிடைத்த பிறகுதான் ஷூட்டிங்கில் கலந்துகொண்டாராம்.

‘துப்பறிவாளன்’ படத்தில் துறுதுறுப்பாகவும், ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் க்யூட் லவ்வராகவும் நடித்த அனு இம்மானுவேலுக்கு அடுத்தடுத்து தமிழில் ஏறுமுகம் இல்லை. காரணம், அம்மணி கவர்ச்சியான நடிப்புக்கு இறங்கிவரவில்லை. இதனாலேயே முன்னணி நாயகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு கைநழுவிப்போனது. இதில் வெறுத்துப்போன அனு இம்மானுவேல் ‘மகா சமுத்திரம்’ என்கிற தெலுங்குப் படத்தில், கவர்ச்சி மழை பொழிந்திருக்கிறாராம். இந்தப் படத்துக்குப் பிறகு, அம்மணிக்கு ஏறுமுகம்தான் என்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘இனி வரும் நாள்கள் எல்லாருக்கும் நல்லாருக்கும்’ என்று நட்பு வட்டாரத்தில் பாசிட்டிவாகப் பேசிவருகிறார் இனியா. அவ்வப்போது போட்டோ ஷூட், அடிக்கடி பாட்டுப் பாடுவது என்று பொழுதைக் கழித்துவரும் இனியா, இப்போது சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ படத்தில் நடித்துவருகிறார்.