Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ராம் சரணின் 15-வது படத்தை இயக்கவிருக்கும் ஷங்கர், தெலுங்குப் படவுலகையே அனுதினமும் பரபரப்புச் செய்தியால் திணறடித்துவருகிறார்

பிரீமியம் ஸ்டோரி

ஆர்யாவை வைத்து ‘சந்தனத்தேவன்’ படத்தை இயக்கினார் அமீர். பட்ஜெட் எகிறியதால் படம் பாதியிலேயே நின்றது. “ஆர்யாவுக்கு நல்ல பிசினஸ் இருக்கிறது. நம்பி முதல் போடுங்கள்” என அமீர் போராடியும், ‘பத்து கோடிக்கு மேல் ஆர்யாவுக்கு பிசினஸ் கிடையாது’ என ஒதுங்கிக்கொண்டது தயாரிப்புத் தரப்பு. தற்போது வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ 40 கோடிக்கு மேல் பிசினஸ் ஆக, ‘சந்தனத்தேவன்’ மறுபடியும் ஸ்டார்ட் ஆகிற வாய்ப்பு உருவாகியிருக்கிறது. ‘சந்தனத்தேவன் என் அடுத்த படமாக அமைந்தால், நிச்சயம் அதுதான் என் உச்சம்’ என சிலிர்க்கிறார் ஆர்யா.

‘டான்’ படப்பிடிப்புக்காகப் பழநி பக்கம் போன சிவகார்த்திகேயன், முருகன் கோயிலுக்குப் போய் சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார். சமீபத்தில் பிறந்த தன் மகனுக்குத் தந்தை பெயரையும், முருகக்கடவுள் பெயரையும் இணைத்து ‘குகன் தாஸ்’ எனப் பெயர்வைத்தார். ‘குகன் தாஸ்’ பெயரில் அர்ச்சனை செய்து பிரசாதம் கொடுத்த கோயில் நிர்வாகிகள், ‘தரிசனம் முடிந்து வீட்டுக்குப் போய் மகனுக்குத் திருநீறு பூசுங்க’ என்றார்களாம். சிவாவுக்கோ ஷூட்டிங் போகவேண்டிய சூழல். இதற்கிடையில், “சார், ஸ்பாட்டில் கடுமையான கூட்டம். கட்டுப்படுத்த முடியலை. ஷூட்டிங் கேன்சல்...” என இயக்குநர் போன் செய்ய, உற்சாகமாக மகனைப் பார்க்க ஓடோடிச் சென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

இன்ஸ்டாவில் ரேஸ் வீடியோக்களாகப் போட்டு, கார் ரேஸராகவும் கைதட்டல்களை அள்ளுகிறார் நிவேதா பெத்துராஜ். தெலுங்கில் இரண்டு, தமிழில் இரண்டு என நடித்துமுடித்த நான்கு படங்களின் ரிலீஸுக்காக வெறித்தனமான வெயிட்டிங்கிலிருக்கிறார் நிவேதா!

ராம் சரணின் 15-வது படத்தை இயக்கவிருக்கும் ஷங்கர், தெலுங்குப் படவுலகையே அனுதினமும் பரபரப்புச் செய்தியால் திணறடித்துவருகிறார். ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை புக் பண்ணி அதகளப்படுத்திய ஷங்கர், பிரபல சவுத் கொரியன் நாயகி பே சூஸியையும் படத்தில் இணைத்திருக்கிறார். இதற்கிடையில் நம்மூர் விஜய் சேதுபதியுடனும் பேச்சுவார்த்தை நடத்திவரும் ஷங்கர், ராம் சரணுக்கு இன்னொரு ஜோடியாக அஞ்சலியை புக் பண்ணப்போகிறாராம். அடுத்தடுத்து வரும் அப்டேட்டுகளால் ராம் சரண் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

விஜய்யின் அடுத்த படத்துக்குக் கதை கேட்கும் படலம் தொடங்கிவிட்டது. ‘பீஸ்ட்’ படத்தை முடிக்கும் முன்னரே அடுத்த கதையை ஓகே செய்து முன் தயாரிப்பு வேலைகளைத் தொடங்கிவிட நினைக்கிறாராம் விஜய். “மீண்டும் முருகதாஸ்…” எனச் சிலர் சொல்ல, முருகதாஸ், அட்லி வகையறாக்கள் இப்போதைக்கு வேண்டாம் எனச் சொல்லிவிட்டாராம் விஜய். அதேநேரம் புதுமுக இயக்குநர்களையும் தவிர்க்கச் சொல்லிவிட்டாராம். பாண்டிராஜ், விக்னேஷ் சிவன், கார்த்திக் சுப்புராஜ், திருக்குமரன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் தீவிரமாக அடிபடுகின்றன.

உஷ்…

விமானப் படத்தில் அறிமுகமான ‘அபாரமான’ நடிகைக்கு நல்ல வரவேற்பு. ஆனாலும், அடுத்தடுத்து படங்களில் அம்மணி கமிட்டாகவே இல்லை. உடலை நன்கு குறைத்து, பக்கா ஸ்லிம்மான பிறகுதான் அடுத்த படம் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். #காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள அம்மணிக்கு யாராச்சும் கத்துக்கொடுங்கப்பா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு