Published:Updated:

மிஸ்டர் மியாவ்!

காயத்ரி
பிரீமியம் ஸ்டோரி
காயத்ரி

இப்போது ‘கொலைகள் ஓய்வதில்லை’ படத்தில் ஹீரோயினாக புரொமோஷன் பெற்றிருக்கிறார் காயத்ரி!

மிஸ்டர் மியாவ்!

இப்போது ‘கொலைகள் ஓய்வதில்லை’ படத்தில் ஹீரோயினாக புரொமோஷன் பெற்றிருக்கிறார் காயத்ரி!

Published:Updated:
காயத்ரி
பிரீமியம் ஸ்டோரி
காயத்ரி

மித்ரன் ஜவஹர் இயக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில், தனுஷுடன் நடிக்கிறார் பாரதிராஜா. இதற்கிடையில் பாரதிராஜாவிடம் நீண்டகாலம் பணியாற்றிய நிர்மல்குமார் இயக்கும் ‘நானா’ படத்துக்கு அவர் தேதி கொடுக்கவேண்டிய நெருக்கடி. “இரண்டே இரண்டு நாள் கொடுத்தால் என் படத்தை முடிச்சுடுவேன் சார்…” என நிர்மல்குமார் கெஞ்ச, தனுஷ் படத் தரப்பினரோ, “நாளை நீங்க வந்தே ஆகணும் சார்” என்றார்களாம். தனுஷுக்கு போன் போட்ட பாரதிராஜா, “நிர்மல் ரொம்ப கஷ்டப்படுறான். எனக்கு ரெண்டு நாள் கொடுப்பியா தனுஷ்?” எனக் கேட்க, உடனே ஓ.கே சொன்னாராம் தனுஷ். கோவில்பட்டிக்கு வந்து, தன் உதவியாளரின் படத்தை முடித்துக் கொடுத்த பிறகே நிம்மதிப் பெருமூச்சுவிட்டிருக்கிறார் பாரதிராஜா.

‘நட்சத்திரம் நகர்கிறது’ பட ஷூட்டிங்கில் தீவிரமாகிவிட்டார் இயக்குநர் பா.இரஞ்சித். நடிக்கும் அத்தனை பேருக்குமே ஏற்கெனவே பயிற்சி கொடுக்கப்பட்டிருப்பதால், ஷூட்டிங் படு வேகமாக நடக்கிறதாம். இரண்டே மாதங்களில் இந்தப் படத்தை முடித்துவிட்டு மீண்டும் பெரிய ஹீரோக்கள் பக்கம் திரும்பவிருக்கிறாராம் பா.இரஞ்சித். முதற்கட்டப் பேச்சு வார்த்தையில் அடிபடுகிற அந்த ஹீரோ தனுஷ் என்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் நடித்து நீண்ட காலமாக உறங்கிக்கிடந்த `ஐங்கரன்’ படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துவிட்டார் டைரக்டர் ரவியரசு. ஒருவழியாகப் படம் வெளியாவதில் ஏக குஷியில் இருப்பவர் காயத்ரி ரெமா. காரணம், ஹீரோயின் மஹிமா நம்பியாராக இருந்தாலும், கதையைக் கடைசிவரை நகர்த்திச் செல்லும் நாயகி காயத்ரிதானாம்! இப்போது ‘கொலைகள் ஓய்வதில்லை’ படத்தில் ஹீரோயினாக புரொமோஷன் பெற்றிருக்கிறார் காயத்ரி!

மிஸ்டர் மியாவ்!
மிஸ்டர் மியாவ்!

வில்லனும் அல்லாத குணச்சித்திரப் பாத்திரமும் அல்லாத தனித்துவமான கேரக்டரில் நடித்து ‘சார்பட்டா’ படத்தில் கவனம் ஈர்த்திருந்தார் கலையரசன். சசிகுமார், ஜோதிகா நடிக்கும் ‘உடன்பிறப்பே’ படத்திலும் கலையரசனுக்கு இதே மாதிரியான கேரக்டராம். யாரும் யூகிக்க முடியாத ‘அதிபன் மல்லிகொண்டான்’ என்கிற பாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன், இந்தப் படம் தனக்குப் பெரிய அளவில் பெயர் வாங்கித்தரும் என்கிறார் நம்பிக்கையாக.

குஷ்பு மீண்டும் பரபரப்பான நடிகையாக விரும்புகிறார். அம்மா, அண்ணி, அக்கா என எந்தக் கதாபாத்திரத்திலும் நடிக்க ரெடி எனச் சொல்லி, நிறைய கதைகள் கேட்டுவருகிறார். சொந்தத் தயாரிப்பில் படம் எடுக்கிற ஐடியாவிலும் இருக்கிறாராம். ‘இன்னும் இரண்டு வருடங்களுக்குத் தீவிர சினிமா…’ எனச் சொல்லியிருக்கிறாராம் குஷ்பு. நீலாம்பரி, ராஜமாதா, சந்திரமுகி எனக் காலத்துக்கும் பெயர் சொல்லும் பாத்திரம் ஒன்றில் நடித்துவிட வேண்டும் என்பதுதான் குஷ்புவின் இலக்காம்.

உஷ்…

நம்பர் நடிகையின் சமீபத்திய படம், அந்நிய மொழிப்படத்தின் ரைட்ஸ் வாங்கி எடுக்கப்பட்டதாக இப்போது சொல்லப்படுகிறது. ஆனால், படம் ஆரம்பித்தபோது காப்பி ரைட்ஸ் வாங்காமல் கதையைச் சுட்டுத்தான் எடுத்தார்களாம். பாதி படத்தை முடித்தபோது, அப்படியே அந்நிய மொழிப் படத்தின் காப்பி எனப் பெரிதாகப் பரவிவிட, வேறு வழியில்லாமல் அதன் பிறகுதான் ரைட்ஸ் வாங்கினார்களாம். #நெற்றிக்கண் திறப்பினும்…

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism