Published:Updated:

மிஸ்டர் மியாவ்

தமன்னா
பிரீமியம் ஸ்டோரி
தமன்னா

அசுர நடிகரின் சமீபத்திய படம் நற்கவனம் பெற்றதில் அவரைச் சுற்றியிருக்கும் அத்தனை பேருக்கும் மகிழ்ச்சி. ஆனால், நடிகருக்கு மட்டும் கொஞ்சம்கூட நிம்மதி இல்லையாம்.

மிஸ்டர் மியாவ்

அசுர நடிகரின் சமீபத்திய படம் நற்கவனம் பெற்றதில் அவரைச் சுற்றியிருக்கும் அத்தனை பேருக்கும் மகிழ்ச்சி. ஆனால், நடிகருக்கு மட்டும் கொஞ்சம்கூட நிம்மதி இல்லையாம்.

Published:Updated:
தமன்னா
பிரீமியம் ஸ்டோரி
தமன்னா

தீவிர அரசியலைவிட்டு ஒதுங்கி, முழு நேர நடிப்பில் இறங்கிவிட்ட குணச்சித்திர நடிகருக்கு தேதி ஒதுக்க முடியாத அளவுக்கு வாய்ப்புகள் குவிந்தவண்ணம் இருக்கின்றனவாம். அதனால், பல வருடக் கடன்களை அடைத்து நிம்மதி அடைவதற்கான வாய்ப்பை இந்த வருடத்துக்குள் பெற்றுவிடலாம் என நினைக்கிறார் அந்த நடிகர். இதற்கிடையில் மீண்டும் அவரைத் தயாரிப்பு வேலையில் களமிறக்கிவிட, அவரைச் சுற்றி இருப்பவர்கள் தீவிரமாக இருக்கிறார்களாம். அடுத்த வருடத்துக்குள் மூன்று சிறு படங்களைத் தயாரித்து மிகப்பெரிய லாபம் பார்க்கலாம் என நடிகருக்கு ஆசைகாட்டி வருகிறார்கள் அந்த நண்பர்கள்.

பிரகாச நடிகரின் தயாரிப்பு நிறுவனத்தில் அவர் மனைவியும் இயக்குநராக இருக்கிறார். அதனால், அவர்கள் தயாரிக்கும் படங்களில் இருவரின் பெயர்களும் இணைந்து வரும். ஆனால், பிரகாச நடிகர் தன் தம்பியைவைத்து தயாரித்த படத்துக்குத் தன் பெயரைப் போட வேண்டாம் எனச் சொல்லிவிட்டாராம் அவர் மனைவி. படம் சரியில்லாததால்தான் தன் பெயரைப் போட வேண்டாம் என அவர் சொல்லிவிட்டதாக படக்குழு மத்தியில் பயங்கர பரபரப்பு கிளம்பியது. ஆனால், உண்மையான காரணம் அது இல்லையாம். சமூகக் கருத்துகளை முன்னிறுத்தும் படங்களில் மட்டும் தன் பெயர் வரட்டும் என நினைக்கிறாராம் பிரகாச நடிகரின் மனைவி. படத்தின் இயக்குநரை அழைத்து அதை விளக்கமாகவும் சொல்லிவிட்டாராம்.

தமன்னா
தமன்னா
தமன்னா
தமன்னா

புயல் காமெடி நடிகரை ஹீரோவாக்கி, படம் தயாரிக்கும் ஈழத்து நிறுவனம் படாதபாடுபடுகிறதாம். தயாரிப்புக்கு ஆகும் செலவைக் காட்டிலும் தனிப்பட்ட ஹீரோவுக்கு ஆகும் செலவு எகிறிக்கொண்டே போகிறதாம். கடற்கரையை ஒட்டியிருக்கும் ஹோட்டலில் ஒரு நாள் வாடகை மற்றும் இத்யாதிகள் சேர்த்து பல லகரங்களைத் தாண்டுகிறதாம். ரூமை காலி செய்யச் சொல்லி ஹோட்டல் நிர்வாகமே கொந்தளிக்கிற அளவுக்கு சேட்டைகளும் ஜாஸ்தியாம். தயாரிப்பு நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருக்கும் மொழிப்புள்ளி காமெடி நடிகரை கன்ட்ரோலில் எடுக்க முடியாமல் படாதபாடுபடுகிறாராம்.

அசுர நடிகரின் சமீபத்திய படம் நற்கவனம் பெற்றதில் அவரைச் சுற்றியிருக்கும் அத்தனை பேருக்கும் மகிழ்ச்சி. ஆனால், நடிகருக்கு மட்டும் கொஞ்சம்கூட நிம்மதி இல்லையாம். காரணம், படத்தை முழுக்க முழுக்க இயக்கியவர் அவர்தானாம். பெயரளவுக்குத்தான் இன்னோர் இயக்குநரை நியமித்திருந்தாராம். இறுதிக்கட்ட நேரத்தில் படம் மிகச் சிறப்பாக வந்திருப்பதாகச் சொல்லி, அசுர நடிகரின் பெயரையே போடச் சொன்னார்களாம். சம்பந்தப்பட்ட இயக்குநரும் அதற்குச் சம்மதித்தாராம். ஆனால், படத்தைப் பார்த்த நடிகருக்குப் பெரிய திருப்தி இல்லாததால், தன் பெயரைப் போட வேண்டாம் எனச் சொல்லிவிட்டாராம். கணிப்பை மீறி படம் கவனம் பெற, கொண்டாடவும் முடியாமல், திண்டாடவும் முடியாமல் தவிக்கிறார் அசுர நடிகர்.