அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ராஷி கண்ணா
பிரீமியம் ஸ்டோரி
News
ராஷி கண்ணா

‘சார்பட்டா’ படத்தில் மாஞ்சா கண்ணன் கதாபாத்திரத்தில் நற்கவனம் பெற்ற நடிகர் மாறன், படம் ரிலீஸாவதற்கு முன்னரே கொரோனாவால் மறைந்தார்.

இயற்கை சார்ந்த நிகழ்வுகளில் ஆர்வமான தன் ரசிகர் ஒருவரின் மேல், சிவகார்த்திகேயனுக்குப் பெரிய மரியாதை. அந்த ரசிகரின் பிறந்தநாளில் அவர் வீட்டுக்கே போய் சர்ப்ரைஸ் பண்ணியிருக்கிறார். முன்னணி நட்சத்திரம் எளிய வீட்டில் திடீர் தரிசனம் கொடுக்க, அந்த ரசிகரின் குடும்பமே திண்டாடிப்போனதாம். “உங்களுக்குப் பையன் பிறந்தப்போ அதைக் கொண்டாடும்விதமா நாங்க நட்டது சார்” எனச் சொல்லி அந்த ரசிகர் வேப்ப மரக்கன்றைக் காட்ட, நெகிழ்ந்து போயிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

கடகடவென்று க்ராஃப் ஏறியவர்களில் ராஷி கண்ணா, டாப்பில் இருக்கிறார். எட்டு படங்களுக்கு மேல் கைவசமிருக்க, ‘தி ஃபேமலி மேன்’ இயக்குநர்கள் ராஜ் & டி.கே இயக்கத்தில் வெப் சீரீஸிலும் நடித்துவருகிறார் ராஷி. தெலுங்கில் சில பாடல்களையும் பாடியுள்ள ராஷி, நடிப்பில் பிஸியான பிறகு பாடுவது குறைந்தது குறித்துச் சின்னதாக வருத்தத்தில் இருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘சார்பட்டா’ படத்தில் மாஞ்சா கண்ணன் கதாபாத்திரத்தில் நற்கவனம் பெற்ற நடிகர் மாறன், படம் ரிலீஸாவதற்கு முன்னரே கொரோனாவால் மறைந்தார். திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புக்காகப் பல வருடங்கள் போராடிய மாறனுக்கு ‘சார்பட்டா’ சரியான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மாறனின் குடும்பம் மிக வறுமையான நிலையில் அல்லாடுகிற தகவல் தெரியவந்திருக்கிறது. நடிகர் விஜய் தொடங்கி விமல் வரை பலருக்கும் மிக நெருக்கமானவர் மாறன். அதனால் உரியவர்களின் கவனத்துக்கு விஷயத்தைக் கொண்டுபோய் அவர் குடும்பத்துக்கு உதவுகிற முயற்சிகள் நடக்கின்றன.

கலர்ஃபுல் நாயகியாக மட்டுமே அறியப்பட்ட ஆண்ட்ரியாவை அட்டகாசமான நடிப்பு ராட்சசியாக மாற்றியிருக்கிறார் மிஷ்கின். இதுவரை பார்த்திராத ஆண்ட்ரியாவை ‘பிசாசு - 2’ படத்தில் பார்க்க முடியும் என்கிறார்கள். மிஷ்கின் ஒருபடி மேலே போய், ‘இந்தப் படத்தில் ஆண்ட்ரியாவுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்’ என நம்பிக்கையாகச் சொல்கிறார்.

இயக்குநர் மணி ரத்னம் தவிர்த்து, பிற இயக்குநர்கள் எவருடைய படத்திலும் இரண்டாவது முறையாகக் கார்த்தி களமிறங்கவில்லை. அந்தக் குறையை உடைத்திருக்கிறார் இயக்குநர் முத்தையா. ‘கொம்பன்’ படத்தில் கார்த்தி - முத்தையா கூட்டணி ஹிட் அடித்த நிலையில், சிறு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இருவரும் இணைந்திருக்கிறார்கள். கோயில் நிகழ்வுகளுக்குக் கீற்றுக் கொட்டகை போடுகிற மிக வித்தியாசமான கதாபாத்திரமாம் கார்த்திக்கு.

உஷ்…

அட்டகாசமாக உருவாகிவரும் சூப்பர் நடிகரின் அண்ணன் - தங்கை பாசப் படத்தை, சமீபத்தில் சிலருக்குத் திரையிட்டுக் காட்டியதாம் சேனல் தயாரிப்பு நிறுவனம். படத்தைப் பார்த்தவர்கள் சூப்பர் நடிகருக்கு போன் போட்டுச் சிலாகிக்க, “என்னை ஏன் அழைக்கலை?” எனக் கேட்டாராம் நடிகர். சேனல் தரப்பிலிருந்து எவ்வித பதிலும் இல்லாத நிலையில், “உங்க உடல்நலனை எண்ணித்தான் சார்...” என இயக்குநர் விளக்கம் கொடுக்க, அதன் பிறகே நிம்மதியானாராம் சூப்பர் நடிகர்.