Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஸ்ரீநிதி ஷெட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீநிதி ஷெட்டி

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்

மிஸ்டர் மியாவ்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்

Published:Updated:
ஸ்ரீநிதி ஷெட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீநிதி ஷெட்டி
  • தமிழ், தெலுங்கு மொழிகளில் அனுஷ்கா நடித்து வெளியான ‘பாகமதி’ படத்தை ‘துர்காவதி’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யவிருக்கிறார்கள். அதில், அனுஷ்கா நடித்த கதாபாத்திரத்தில் பூமி பெட்னேகர் நடிக்கிறார். ‘பாகமதி’ படத்தை இயக்கிய அசோக்தான் இந்தப் படத்தையும் இயக்கவுள்ளார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
  • ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 11 பிசோடுகள்கொண்ட வெப் சீரிஸாக எடுத்து முடித்துள்ளது கெளதம் மேனன் - பிரசாத் முருகேசன் கூட்டணி. இதில், ஜெயலலிதாவின் சிறு வயது போர்ஷனில் அவரின் தாய் சந்தியாவாக நடித்துள்ளார் நடிகை சோனியா அகர்வால்.

பூமி பெட்னேகர்
பூமி பெட்னேகர்
  • ‘கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ‘டாக்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் வினய் முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

டாப்ஸி
டாப்ஸி
  • மோகன்லாலின் மகனும் நடிகருமான பிரணவ், இயக்குநர் பிரியதர்ஷனின் மகளும் நடிகையுமான கல்யாணி பிரியதர்ஷன் ஜோடியை வைத்து புது படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் வினித் ஸ்ரீனிவாசன். ‘ஹ்ரிதயம்’ எனப் பெயரிட்டுள்ள இந்தப் படத்தை, 2020-ம் ஆண்டு ஓணம் பண்டிகையன்று வெளியிட உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  • ஒவ்வொரு படத்துக்கும் சேஞ்ச் ஓவர் காட்டி பாலிவுட்டைக் கலக்கிவருகிறார் டாப்ஸி. ‘சூர்மா’, ‘சாந்த் கி ஆங்க்’ உள்ளிட்ட பயோபிக்கில் நடித்தவர், இப்போது இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் பயோபிக்கிலும் நடிப்பது உறுதியாகிவிட்டது. ‘சபாஷ் மித்து’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, ராகுல் தோலக்யா இயக்குகிறார்.

ஸ்ரீநிதி ஷெட்டி
ஸ்ரீநிதி ஷெட்டி
  • அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படத்துக்கு ‘அமர்’ எனப் பெயர் சூட்டியுள்ளார்களாம். இதில் வித்தியாசமான 20 தோற்றங்களில் வருகிறார் விக்ரம். மலையாள நடிகர் ஷேன் நிகாம் இந்தப் படத்தில் நடிக்க லேட்டஸ்டாக ஒப்பந்தமாகியுள்ளார்.

ம்யூட்

  • விரல் நடிகரை அரசியல் படத்தில் நடிக்கவைக்க ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ஒருவழியாக ஷூட்டிங்குக்கு அவரைத் தயாராக்கிவருகின்றனர். ஜனவரி இறுதியில் தொடங்கும் படப்பிடிப்பு ஏப்ரல் பாதி வரை செல்கிறதாம். கேப் விட்டால் மீண்டும் ஏதாவது வம்பு வந்துவிடுமோ என்றெண்ணிதான் இப்படி ஒரு திட்டமாம்.

  • ஹீரோ நடிகர் - நம்பர் நடிகையின் பெஸ்டி இயக்குநர் கூட்டணியில் உருவாக இருந்த படத்தை தயாரிப்பதாகச் சொன்ன பெரிய நிறுவனம் திடீரென விலகிவிட்டதாம். அதனால், கோலிவுட்டில் சமீபமாகக் களமிறங்கியுள்ள பாலிவுட் தயாரிப்பாளரை அணுகியுள்ளாராம் அந்த இயக்குநர். தயாரிப்புத் தரப்பிலிருந்து கிரீன் சிக்னல் விழுந்தால், ஆச்சர்யப்படுவதற்கில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism