அலசல்
அரசியல்
கார்ட்டூன்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஸ்டெஃபி படேல்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டெஃபி படேல்

‘வலிமை’ படத்தில் பாலிவுட் நடிகை...

  • ‘மார்கோனி மாத்தாயி’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார், விஜய் சேதுபதி. இப்போது அடுத்த மலையாளப் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம். ஆர்.ஜே.ஷான் இயக்கும் இந்தப் படத்தில் மஞ்சு வாரியாருடன் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும், 2020, ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஞ்சு வாரியார்
மஞ்சு வாரியார்
  • தமிழகத்தின் எவர்க்ரீன் நாயகியான த்ரிஷா, 2018-ல் வெளியான ‘ஹே ஜூட்’ படத்தின்மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு மனைவியாக நடிக்கவிருக்கிறார் த்ரிஷா. ஆக்‌ஷன் - த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, இந்தியா மட்டுமன்றி லண்டன், இஸ்தான்புல் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நடக்கவிருக்கிறது.

  • பட வாய்ப்புகள் இல்லாமல் அப்செட்டில் இருந்த நடிகை பூஜா ஹெக்டே, தற்போது நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார். அல்லு அர்ஜுனுடன் நடித்த ‘அலா வைகுந்தபுரமுலோ’ ஜனவரியில் வெளியாக இருக்கிறது. தவிர, பிரபாஸுடன் ஒரு படம், அகிலுடன் ஒரு படம் என அம்மணி பிஸியோ பிஸி! இவைபோக பாலிவுட்டிலிருந்தும் ஆஃபர் வர, குஷியில் குதித்துக்கொண்டிருக் கிறாராம் பூஜா ஹெக்டே.

பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே
  • அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், ரெஜினா கஸாண்ட்ரா நடிக்கும் ஸ்பை - த்ரில்லர் படத்தில் மற்றொரு நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் தெலுங்கு நடிகையான ஸ்டெஃபி படேல். தமிழில் இதுவே இவருக்கு முதல் படம்.

  • போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் ‘வலிமை’ படப்பிடிப்பு, ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்குகிறது. ஆனால், ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லையாம். அதனால், ஹீரோயின் இல்லாத பகுதிகளை முதலில் ஆரம்பித்துவிடலாம் என முடிவுசெய்திருக்கிறது படக்குழு. விரைவில் பாலிவுட் நடிகை ஒருவர் ஹீரோயினாக ஒப்பந்தமாவார் என்கிறார்கள்.

ஸ்டெஃபி படேல்
ஸ்டெஃபி படேல்
  • 2010-ல் வெளியான ‘நோ ப்ராப்ளம்’ படத்துக்குப் பிறகு, சுஷ்மிதா சென் இந்தியில் நடிக்கவில்லை. 2015-ல் ஒரு பெங்காலி படத்தில் மட்டும் நடித்திருந்தார். தற்போது, ‘என்னுடைய அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பமாகவிருக்கிறது. நான் உங்களுக்காக மீண்டும் வருகிறேன்’ என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ம்யூட்

  • எலைட் இயக்குநர் இயக்கும் வரலாற்றுப் படத்தில் நடிக்கக் கேட்டதும் உடனே ஓகே சொல்லி மற்ற படங்களுக்குக் கொடுத்த கால்ஷீட்டை இவருக்குக் கொடுத்துள்ளனர், நிறைய நாயகர்கள். இந்தப் படம் முடியும் வரை மற்ற படங்களில் அவர்கள் நடிக்க வாய்ப்பில்லை. அதனால் இவர்களை வைத்து படமெடுக்க இருந்த இயக்குநர்கள், அப்செட்டில் இருக்கிறார்களாம். சிலர் அதற்குள் வேறு படத்தை எடுக்கலாம் என முடிவெடுத்துவிட்டார்களாம்.