அலசல்
அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஐஸ்வர்யா லட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
ஐஸ்வர்யா லட்சுமி

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

  • அமிதாப் பச்சனும் டாப்ஸியும் நடித்த ‘பிங்க்’ இந்திப்படம், தமிழில் அஜித் - ஷ்ரதா ஸ்ரீநாத் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’யாக வெற்றிபெற்றது. `பிங்க்’ இப்போது தெலுங்கிலும் ரீமேக் ஆகவுள்ளது. இதில் பவன் கல்யாணும், நிவேதா தாமஸும் நடிக்க உள்ளனர்.

நிவேதா தாமஸ்
நிவேதா தாமஸ்
  • ஹீரோயின் முடிவாகாத நிலையில் ஹீரோயின் இல்லாத பகுதிகளை முதலில் எடுத்துவிட ஹைதராபாத் புறப்பட்டுவிட்டது ‘வலிமை’ படக்குழு. இந்நிலையில், இதில் அஜித்தின் ஜோடியாக நடிக்க யாமி கெளதம், இலியானா உள்ளிட்ட நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

  • ஆர்.ஜே பாலாஜி மற்றும் சரவணன் இணைந்து இயக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் படப்பிடிப்பு, கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு, ஆர்.ஜே பாலாஜி இயக்கும் மற்றொரு ஸ்பூஃப் படத்தில் நடிக்கவும் சம்மதித்துள்ளாராம் நயன்தாரா.

  • இதுவரை எந்த ஹாரர் படத்திலும் நடிக்காமல் இருந்த நடிகை மஞ்சு வாரியார், இப்போது ஒரு ஹாரர் படத்தில் நடித்துவருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த மலையாளப் படத்தில் சன்னி வெய்ன் நாயகனாக நடிக்க, ரஞ்சித் கமல ஷங்கர், சலீல் ஆகியோர் இயக்குகின்றனர்.

ஐஸ்வர்யா லட்சுமி
ஐஸ்வர்யா லட்சுமி
  • ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவி கேரக்டரில் நடிக்க இருந்த கீர்த்தி சுரேஷ், அதிலிருந்து விலகியுள்ளார். கால்ஷீட் பிரச்னை காரணமாக ‘பொன்னியின் செல்வன்’ அல்லது ரஜினி படம் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர், ரஜினி படத்துக்கு யெஸ் சொல்லிவிட்டாராம். இந்நிலையில், ஆக்‌ஷன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, ‘பொன்னியின் செல்வன்’படத்தில் இணைந்துள்ளார்.

ம்யூட்

  • உச்ச நடிகரின் பட விழாவில் கலந்துகொண்ட நடன நடிகர், அந்த மேடையை தனக்காகப் பயன்படுத்திக்கொண்டார் என்றும், கைத்தட்டல் வாங்குவதற்காக தேவையில்லாத சில விஷயங்களைப் பேசிவிட்டார் என்றும், உச்ச நடிகரின் விசுவாசிகளும் அந்தப் படத்தின் தயாரிப்புப் பிரிவினரும் கடுப்பில் இருக்கின்றனராம்.

  • பிரமாண்டமாக எடுத்த படம் ஃப்ளாப் ஆனதால் விரக்தியில் இருக்கும் பாலிவுட் கான் நடிகர், தன் அடுத்த ஸ்டெப் பயங்கரமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளார். மற்ற மொழிகளில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் இயக்குநர்களைச் சந்தித்து பேசிவருகிறார். தவிர, வெப் சீரிஸில் கலக்கும் இயக்குநர்களிடமும் கதை கேட்டுள்ளாராம். ஆனால், அது ரீமேக்காக இருக்கக் கூடாது என்ற கண்டிஷனும் வைக்கிறாராம்.