கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா லட்சுமி நடித்துவரும் படத்தின் லண்டன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மீதமுள்ள காட்சிகளை சென்னையில் தற்போது எடுத்துவருகின்றனர். இந்த போர்ஷனில் தனுஷுக்கு ஜோடியாக ‘நோட்டா’, ‘கேம் ஓவர்’ உள்ளிட்ட படங்களில் நடித்த சஞ்சனா நடராஜன் நடித்துவருகிறார்.

கெளதம் மேனன் - பிரசாத் முருகேசன் ஆகியோர் இணைந்து இயக்கிய ‘குயின்’ வெப் சீரிஸ், எம்.எக்ஸ் பிளேயர் எனும் ஆன்லைன் தளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது. 11 எபிசோடுகளோடு முதல் சீஸன் முடிந்த நிலையில், ‘அடுத்த சீஸன் வரும், அதற்கான கதையும் ரெடி’ என்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதமிழ், தெலுங்கு என கலந்துகட்டி நடித்துவரும் சமந்தா, ‘தி ஃபேமிலிமேன்’ எனும் வெப் சீரிஸின் இரண்டாவது பாகத்தில் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து, ‘மாயா’, ‘கேம் ஓவர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகும் பைலிங்குவல் படமொன்றில் நடிக்கவிருக்கிறார்.

சுரேஷ் சங்கையா இயக்கத்தில் 2017-ல் வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. சுரேஷ் சங்கையா, மீண்டும் ஒரு கிராமத்துக் கதையைப் படமாக்க இருக்கிறார். அதில் பிரேம்ஜி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘ஆட்டோ சங்கர்’, ‘திரவம்’ உள்ளிட்ட வெப் சீரிஸ்களில் நடித்த ஸ்வயம் சித்தா நடிக்கிறார். இந்தப் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் அருப்புக்கோட்டையில் 30 நாட்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பயோபிக் சீஸனில் அடுத்தாக முன்னாள் பேட்மின்டன் வீரரும், பி.வி.சிந்துவின் பயிற்சியாளருமான புல்லேலா கோபிசந்தின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகத் தயாராகிறது. தமிழ், தெலுங்கு, இந்தியில் எடுக்கப்படும் இந்தப் படத்தில் கோபிசந்தாக தெலுங்கு நடிகர் சுதீர் பாபு நடிக்கிறார். இதில் அம்மா - மகன் சம்பந்தப்பட்ட சென்டிமென்ட் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதாம். கோபிசந்தின் அம்மா கேரக்டரில் 80’ஸ் ஹீரோயின் அமலா நடிக்கிறார். படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
ம்யூட்
பொல்லாத இயக்குநர் அடுத்து தளபதி நடிகரை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் பரவின. ஆனால், இயக்குநர் கதை சொன்னது மட்டும்தான் உண்மையாம். கதையில் சில மாற்றங்களைச் செய்யச் சொல்லி நடிகர் கேட்க, இயக்குநர் யோசிப்பதாகச் சொல்லிவிட்டு வந்திருக்கிறாராம்.