Published:Updated:

மிஸ்டர் மியாவ்

திவ்யா பாரதி
பிரீமியம் ஸ்டோரி
திவ்யா பாரதி

‘இளையராஜா - பா.இரஞ்சித் - விக்ரம் கூட்டணி’ எனக் கசிந்த செய்தியில் இளையராஜா மட்டும் மிஸ்ஸிங்.

மிஸ்டர் மியாவ்

‘இளையராஜா - பா.இரஞ்சித் - விக்ரம் கூட்டணி’ எனக் கசிந்த செய்தியில் இளையராஜா மட்டும் மிஸ்ஸிங்.

Published:Updated:
திவ்யா பாரதி
பிரீமியம் ஸ்டோரி
திவ்யா பாரதி

அல்லு அர்ஜூன் நடிப்பில், மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பிவரும் ‘புஷ்பா’ படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை, மிகுந்த போட்டிக்கு மத்தியில் கைப்பற்றியிருக்கிறது சுபாஷ்கரனின் லைகா நிறுவனம். இந்தப் படத்துக்குப் பிறகு, தன்னுடைய தமிழ் மார்க்கெட் தாறுமாறாக உயர்ந்துவிடும் என உறுதியாக நம்புகிறார் ராஷ்மிகா மந்தனா. 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படம், செம்மரக் கடத்தல் பின்னணியை மையமாகவைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. புஷ்பராஜ் என்கிற தமிழரைப் பற்றிய உண்மைக்கதையாம்.

மிஸ்டர் மியாவ்

‘இளையராஜா - பா.இரஞ்சித் - விக்ரம் கூட்டணி’ எனக் கசிந்த செய்தியில் இளையராஜா மட்டும் மிஸ்ஸிங். மற்றபடி இரஞ்சித் - விக்ரம் கூட்டணி முடிவாகிவிட்டது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இருவரும் இணையவிருக்கிறார்கள். இரஞ்சித் சொன்ன ஒன்லைனை விக்ரம் டிக் செய்ய, பெரிய பட்ஜெட்டில் படம் தொடங்கவிருக்கிறது. ‘சார்பட்டா’ ஹிட்டுக்குப் பிறகு, தயாரிப்பாளர்கள் பலரும் இரஞ்சித்துக்குப் பச்சைக்கொடி காட்டிய நிலையில், பழைய பாசத்தில் ஞானவேல் ராஜா நிறுவனத்துக்குக் கையெழுத்து போட்டிருக்கிறார் இரஞ்சித்.

பிரபல சண்டைப் பயிற்சியாளர் சில்வா, சைலன்ட்டாக ஒரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார். மாஸ் ஆக்‌ஷன் படமாக எடுக்கப்போகிறார் எனப் பலரும் நினைத்திருக்க, அப்பா - மகள் பாசத்தை மையமாக்கி மனதை உருகவைத்திருக்கிறாராம். சமுத்திரக்கனி அப்பாவாக நடிக்க, மகளாக நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் நடித்திருக்கிறார். ‘சித்திரைச் செவ்வானம்’ எனக் கவிதையாகத் தலைப்பு வைத்து, படத்தை ஜீ 5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் ஹிட் கொடுத்து நிறைய காலமாகிவிட்டது. இந்தக் குறையை, ‘ஜெயில்’, ‘பேச்சுலர்’ என ஒரே வாரத்தில் அடுத்தடுத்து ரிலீஸாகவிருக்கும் அவருடைய படங்கள் நிச்சயம் தீர்த்துவைக்கும் என்கிறார்கள். வசந்த பாலனின் இயக்கத்தில் வரும் ‘ஜெயில்’ ஜி.வி-க்கு நற்பெயரைப் பெற்றுத்தரும் என உறுதியாகச் சொல்லப்படும் நிலையில், ‘பேச்சுலர்’ படத்தின் பிரத்யேகக் காட்சியைச் சமீபத்தில் பார்த்தவர்கள், ‘யூத் சமூகமே படத்தைக் கொண்டாடித் தீர்க்கும்’ என்கிறார்கள். ‘அடல்ட் கன்டென்ட் அதிகம்’ என்பதையும் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

தயாரிப்பாளரும், சினிமா குறித்த தெளிவான பார்வைகொண்டவருமான தனஞ்செயன், ட்விட்டர் தளத்தின் ஸ்பேசஸ் மீட்டில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் உரையாடுகிறார். தமிழ் சினிமாக்களின் நிலை குறித்த பலருடைய கேள்விகளுக்கும் பக்குவமாக பதிலளிக்கிறார். முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் குறித்த அப்டேட்டுகளையும் தனஞ்செயன் அசால்ட்டாக அடிக்க, ட்விட்டரில் அவருக்கு செம ரெஸ்பான்ஸ்.

உஷ்…

‘தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மட்டும்தான் தியேட்டருக்குச் செல்ல முடியும்’ எனத் தமிழ்நாடு அரசு அறிவித்த நாளில், விரல் நடிகர் கொந்தளித்துவிட்டாராம். ‘என் படத்துக்குச் சிக்கலை உருவாக்கத்தான் இப்படித் திட்டமிட்டுப் பண்றாங்க. நான் கோர்ட்டுக்குப் போவேன்’ என்றெல்லாம் சகட்டுமேனிக்குப் பொங்கினாராம். சமாதானப்படுத்துவதற்குள் பெரும் போராட்டமாகிவிட்டதாம். #இங்க இன்னா சொல்லுது..? ‘செத்த நேரம் சும்மா இருப்பா’னு சொல்லுது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism