* தன் கணவர் நாக சைதன்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடன் மாலத்தீவுக்குப் பறந்திருக்கிறார் நடிகை சமந்தா. மாலத்தீவு சென்றால் அங்கிருந்து கவர்ச்சியான புகைப்படங்கள் பதிவிடுவதுதானே உலக வழக்கம்... சமந்தா மட்டும் விதிவிலக்கா என்ன? வெள்ளை நிற பிகினியில் பாத் டப்பில் அமர்ந்தபடி கவர்ச்சியான புகைப்படத்தைத் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ரசிகர்களைப் பெருமூச்சுவிடவைத்திருக்கிறார்.

* ‘கொரில்லா’ படத்தை இயக்கிய டான் சாண்டி தனது அடுத்த படத்தை ஆரம்பித்திருக் கிறார். ஹீரோயின் சென்ட்ரிக் கதையான இந்தப் படத்தில் ரெஜினா கஸாண்ட்ரா நாயகியாக நடிக்கிறார். த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்துக்கு ‘ஃப்ளாஷ் பேக்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே ரெஜினா கைவசம் ‘சூர்ப்பனகை’, ‘சக்ரா’, ‘கசடதபற’ உள்ளிட்ட பல படங்கள் இருக்கின்றன.

* ‘பிங்க்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘வக்கீல் சாப்’ படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்பே வெளியானது. ஆனால், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தற்போதுதான் அந்தப் படத்தில் நடிப்பதை உறுதி செய்திருக்கிறார் ஸ்ருதி. ஏற்கெனவே, பவன் கல்யாணும் ஸ்ருதிஹாசனும் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்திருக்கின்றனர்.

* பெரும்பாலான நடிகைகள் தம்பி கார்த்தி படத்தில் நடித்த பிறகு அண்ணன் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள். உதாரணமாக, காஜல் அகர்வால், ரகுல்ப்ரீத் சிங், சாயிஷா ஆகியோரைச் சொல்லலாம். அந்தவகையில் ‘சுல்தான்’ படத்தில் கார்த்தியுடன் நடித்த ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் பாண்டிராஜ் - சூர்யா கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

* நடிகராகவும் இசையமைப்பாளராகவும் பயங்கர பிஸியாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், தற்போது ‘கள்வன்’ என்ற புதிய படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ‘நாச்சியார்’, ‘ஹீரோ’ படங்களில் நடித்த இவானா நடிக்கிறார். இந்தப் படத்தை ‘முண்டாசுப்பட்டி’, ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பி.வி.ஷங்கர் இயக்குகிறார்.