Published:Updated:

மிஸ்டர் மியாவ் - சசிகுமாரின் அயோத்தி

தமன்னா
பிரீமியம் ஸ்டோரி
தமன்னா

சமந்தாவுடனான பிரிவால், தன் திரை வாழ்க்கையில் எவ்விதச் சரிவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார் நாக சைதன்யா.

மிஸ்டர் மியாவ் - சசிகுமாரின் அயோத்தி

சமந்தாவுடனான பிரிவால், தன் திரை வாழ்க்கையில் எவ்விதச் சரிவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார் நாக சைதன்யா.

Published:Updated:
தமன்னா
பிரீமியம் ஸ்டோரி
தமன்னா

அஜித்தின் ‘வலிமை’, ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. தான் நடிக்கும் படத்தை ரிலீஸுக்குப் பிறகு பார்ப்பதுதான் அவர் வழக்கம். ஆனால், இயக்குநர் ஹெச்.வினோத் வற்புறுத்தியதால் ‘வலிமை’ படத்தை வீட்டில் பிரத்யேகமாகப் பார்த்திருக்கிறார். ஏற்கெனவே மீண்டும் வினோத்துடன் கூட்டணி அறிவித்திருக்கும் நிலையில், படம் பார்த்த அஜித் பிரமித்துவிட்டாராம். படம் குறித்து மணிக்கணக்கில் வினோத்துடன் உரையாடி நெகிழ்ந்த அஜித், அடுத்த கதையை விரைவில் ரெடி செய்யச் சொன்னாராம்!

சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் வாரிசு அரசியலை நையாண்டியாக்கி வைக்கப்பட்டிருக்கும் காட்சி, ஆளும் தரப்பைக் கடுமையாக ஆத்திரப்படுத்தியிருக்கிறது. படத்தில் இப்படிப்பட்ட காட்சிகள் இருப்பதுகூடத் தெரியாமல், கலைஞர் டி.வி-க்கு ‘மாநாடு’ படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் வாங்க உதயநிதி முயன்றதுதான் ஹைலைட் காமெடி. ‘சிம்புவுக்கு உதவிய உதயநிதி’ என ஆன்லைன் அலப்பறைகள் இதையும் வைரலாக்கியதுதான் கூடுதல் வயிற்றுவலி!

சமந்தாவுடனான பிரிவால், தன் திரை வாழ்க்கையில் எவ்விதச் சரிவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார் நாக சைதன்யா. ‘பங்காராஜூ’, ‘தேங்க்யூ’, ‘லால் சிங் சதா’ எனப் பக்காவான லைன்அப் வைத்திருக்கும் நாக சைதன்யா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கால்வைக்கிற கதையாகத் தேடிவருகிறாராம். தமிழில் கொடிகட்டிப் பறக்கும் ஹீரோயின்தான் ஜோடி என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம். இதற்கிடையில் வெப் சீரீஸ் ஒன்றில் கமிட்டாகியிருக்கும் நாக சைதன்யா, அதில் தனக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் பெயரை டிக் அடித்திருக்கிறாராம்!

மிஸ்டர் மியாவ் - சசிகுமாரின் அயோத்தி
மிஸ்டர் மியாவ் - சசிகுமாரின் அயோத்தி

சசிகுமாரின் அடுத்த படத்துக்கு ‘அயோத்தி’ எனப் பெயர் வைக்கப்பட்டிருப்பது சர்ச்சைகளுக்கு அடி போட்டிருக்கிறது. அயோத்தி நகரத்தையும், ராமேஸ்வரம் பாலத்தையும் சேர்த்து டிசைன் செய்து படக்குழுவும் பரபரப்பை எகிறவைத்திருக்கிறது. ராமேஸ்வரத்துக்குப் புனித யாத்திரை வரும் வட மாநிலக் குடும்பம், தமிழ்நாட்டை எப்படிப் பார்க்கிறது என்பதுதான் கதையின் போக்காம். மிக எளிமையான கதையில் அட்டகாசமான அரசியலைப் பேசவிருக்கிறார்களாம்!

சம்பாதிக்கும் பணத்தைப் படத் தயாரிப்பில் போட்டுவிடக் கூடாது என எப்போதுமே நடிகைகள் எச்சரிக்கையாக இருப்பார்கள். ஜோதிகா, நயன்தாரா போன்ற ஒருசிலரே விதிவிலக்கு. இந்தப் பட்டியலில் அடுத்து இணைபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சிரஞ்சீவியுடன் ‘போலா ஷங்கர்’, மகேஷ் பாபுவுடன் ‘சர்காரு வாரிபட்டா’ என முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ், ‘வாஷி’ என்கிற மலையாளப் படத்தைத் தயாரித்து அதில் நடிக்கவிருக்கிறார். அவருக்கு ஜோடி டோவினோ தாமஸ்!

உஷ்…

‘நாற்பது நாள்களில் முடிக்கிறேன்’ என உத்தரவாதம் கொடுத்து, காமெடி நடிகரின் படத்தைத் தொடங்கிய ‘அசுரத்தனமான’ இயக்குநர், நூறு நாள்களைத் தாண்டி ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறாராம். இப்போதும், படம் இன்னும் எத்தனை நாளில் முடியும் எனச் சொல்ல மறுக்கிறாராம். கமிட்டானவர்கள் கதறிக்கிடப்பதாகத் தகவல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism