Published:Updated:

மிஸ்டர் மியாவ் - அடுத்து ரஜினி அல்லது விஜய்

பிரியங்கா மோகன்
பிரீமியம் ஸ்டோரி
பிரியங்கா மோகன்

அடுத்து ரஜினி அல்லது விஜய் என்பதில் வெகு கவனமாக இருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்

மிஸ்டர் மியாவ் - அடுத்து ரஜினி அல்லது விஜய்

அடுத்து ரஜினி அல்லது விஜய் என்பதில் வெகு கவனமாக இருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்

Published:Updated:
பிரியங்கா மோகன்
பிரீமியம் ஸ்டோரி
பிரியங்கா மோகன்

வசந்த் இயக்கத்தில், சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும், ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் நல்ல கவனம் பெற்றிருக்கிறது. படத்தில் இறுதிப் பகுதியாக வரும் சிவரஞ்சனியின் கதை, அப்படியே ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்கிற மலையாளப் படத்தை ஒத்ததுபோல் இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன. உண்மையில், 2017-ல் ரெடியான இந்தப் படம் சர்வதேச விருதுகளுக்கான போட்டிகளில் பங்கேற்று, மக்கள் பார்வைக்கு வரத்தான் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. அந்த வகையில் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் முன்னோடி வசந்த் படம்தான்.

மிஸ்டர் மியாவ் - அடுத்து ரஜினி அல்லது விஜய்
மிஸ்டர் மியாவ் - அடுத்து ரஜினி அல்லது விஜய்
மிஸ்டர் மியாவ் - அடுத்து ரஜினி அல்லது விஜய்

அடுத்து ரஜினி அல்லது விஜய் என்பதில் வெகு கவனமாக இருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். ‘கடைக்குட்டி சிங்கம்’ கதையை பாண்டிராஜ் முதலில் சொன்னது விஜய்யிடம்தான். ‘ஃபேமிலி சென்டிமென்ட் ஓவரா இருக்கே…’ என விஜய் தவிர்க்க, கார்த்தி நடிப்பில் படம் சூப்பர் ஹிட். அதன் பிறகும் விஜய்க்காக இரு முறை நேரில் போய் கதை சொன்னார் பாண்டிராஜ். விஜய் வெயிட் பண்ணச் சொல்லியிருக்கும் நிலையில், வில்லேஜ், சிட்டி எனக் கலவையான கதையோடு ரெடியாகி வரும் பாண்டிராஜ், விரைவில் ரஜினியைச் சந்திக்கவிருக்கிறார்.

அஜித்தின் படங்களிலேயே பெரிய அளவுக்கு கலெக்‌ஷனைக் குவித்தது ‘விஸ்வாசம்.’ ஆனால், அந்தப் படத்துக்கே வெளிநாட்டு வசூல் குறைவுதான். அந்தக் குறையை ஹெச்.வினோத்தின் ‘வலிமை’ படம் நிவர்த்தி செய்யும் என்கிறார்கள். ஆக்‌ஷன் அளவுக்குப் படத்திலிருக்கும் சென்டிமென்ட் காட்சிகள் வெளிநாட்டு ரசிகர்களைக் குடும்பத்தோடு கொண்டாடவைக்கும் என உறுதியாக நம்புகிறார்கள் எஃப்.எம்.எஸ் உரிமையைப் பெற்றிருப்பவர்கள்.

‘மாநாடு’ படம் ரிலீஸாவதற்கு முன்னால் 15 கோடி சம்பளம் கேட்டார் சிம்பு. ஆனால், 10 கோடிதான் தர முடியும் எனத் தயாரிப்பாளர்கள் தரப்பில் சொன்னார்கள். இதனாலேயே ஓ.கே செய்துவைத்திருந்த கதைகளுக்குக்கூட அட்வான்ஸ் வாங்காமல் தள்ளிப்போட்டு வந்தார் சிம்பு. இந்நிலையில் ‘மாநாடு’ மாபெரும் வெற்றிபெற, 20 கோடி சம்பளம் என்கிறாராம் சிம்பு. இந்த அளவு தொகையைக் கொடுக்கவும் தயாரிப்பாளர்கள் மத்தியில் போட்டி நடக்கத் தொடங்கியிருப்பதுதான் ஹைலைட்.

உஷ்...

அறிமுகப் படத்திலேயே தேசிய விருது பெற்ற இயக்குநர், இப்போது விவசாயப் படம் ஒன்றை முடித்திருக்கிறார். முதலில் ஞானியானவர்தான் இசை என்றிருந்தது. பல விருது விழாக்களுக்குப் போய் சாதித்திருக்கும் படத்துக்கு திடீரென சந்தோஷமானவரை இசையமைப்பாளராக்கிவிட்டார்கள். “இத்தனை வருட காலத்தில் எனக்கு இப்படியோர் அவமானம் நடந்தது இல்லை. வளரும் இசையமைப்பாளர் எப்படி இதற்குச் சம்மதித்தார்?” எனக் கோபமான ஞானியானவர் புகார், பிரஸ் மீட் என வெடிக்கப்போகிறாராம். படக்குழுவும் பதிலுக்குப் பாயத் தயாராகிவருகிறதாம். #சிறிதே இசைத்தாலும் அருமருந்தாகும்...வாழ்வென்ன இசையென்ன உனக்கு ஒன்றாகும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism