Published:Updated:

மிஸ்டர் மியாவ் - சதுரங்க வேட்டை -2 -க்கு விடிவுகாலம்

ஸ்ரேயா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரேயா

‘ஆன்டி இண்டியன்’ புரொமோஷனுக்காகச் சமீபத்தில் ட்விட்டர் ஸ்பேஸ் பக்கம் வந்த ‘புளூ சட்டை’ மாறனை, ரஜினி ரசிகர்கள் வறுத்தெடுத்தனர்

மிஸ்டர் மியாவ் - சதுரங்க வேட்டை -2 -க்கு விடிவுகாலம்

‘ஆன்டி இண்டியன்’ புரொமோஷனுக்காகச் சமீபத்தில் ட்விட்டர் ஸ்பேஸ் பக்கம் வந்த ‘புளூ சட்டை’ மாறனை, ரஜினி ரசிகர்கள் வறுத்தெடுத்தனர்

Published:Updated:
ஸ்ரேயா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரேயா

அல்லு அர்ஜூனின் நடிப்பில், தெலுங்கில் உருவாகியிருக்கும் ‘புஷ்பா’ டிரெய்லர் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. ஒரே படமாகத் திட்டமிட்டுத்தான் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். எடிட் செய்து பார்த்தபோது, எந்தக் காட்சியையும் நீக்க மனமே வரவில்லையாம். மிரட்டலாகவும் பிரமாண்டமாகவும் காட்சிகள் அமைய, ‘பாகுபலி’ பாணியில் படத்தை ‘பார்ட் 1’, ‘பார்ட் 2’ என இரண்டாக வெளியிட முடிவெடுத்திருக்கிறார்கள். இதனால், படத்தின் பிசினஸ் மிகப்பெரிதாக மாறியிருக்கிறது.

பவுன்சர்ஸ் துணையுடன் பந்தாவாக வலம்வரும் வழக்கத்தைத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் சிவகார்த்திகேயன். அவர் பாணியிலேயே ‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார், ‘என்ன சொல்லப் போகிறாய்’ பட புரொமோஷனுக்கு பவுன்சர்ஸ் துணையுடன் வலம்வர, மொத்த கோடம்பாக்கமும் எரிச்சலாகிவிட்டது. அவருடைய பேச்சும் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அஸ்வின் குமாருக்கு ‘ஏ.கே’ என அவர் ரசிகர்கள் பட்டப்பெயர் சூட்டி அழைப்பது அஜித் ரசிகர்களையும் கொந்தளிக்கவைத்திருக்கிறது.

‘ஆன்டி இண்டியன்’ புரொமோஷனுக்காகச் சமீபத்தில் ட்விட்டர் ஸ்பேஸ் பக்கம் வந்த ‘புளூ சட்டை’ மாறனை, ரஜினி ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். “கோடிக்கணக்கான தமிழர்களை முட்டாள் என நினைத்து கருத்து சொன்னவர் ரஜினி. அதற்காக அவர் இதுவரை மன்னிப்புக் கேட்டிருக்கிறாரா?” என மாறனும் பதிலுக்குப் பாய்ந்தார். ‘மாநாடு’ விமர்சனத்தால் ஆத்திரத்திலிருந்த சிம்பு ரசிகர்களும் சேர்ந்து கொந்தளிக்க, “படம் சரியில்லைன்னா விமர்சிப்பது என் உரிமை” என்றார் மாறன். “உங்க விமர்சனம் சரியில்லைன்னா விமர்சிப்பது எங்க உரிமை” என ரசிகர்களும் பாய, மாறன் எஸ்கேப்!

மிஸ்டர் மியாவ் - சதுரங்க வேட்டை -2 -க்கு விடிவுகாலம்
மிஸ்டர் மியாவ் - சதுரங்க வேட்டை -2 -க்கு விடிவுகாலம்

பல நாள்கள் கிடப்பில் கிடந்த ‘சதுரங்க வேட்டை -2’ படத்துக்கு ஒருவழியாக விடிவுகாலம் பிறந்திருக்கிறது. சம்பளச் சர்ச்சையால் டப்பிங் பேசாமல் தவிர்த்துவந்த அரவிந்த்சாமி, சற்றே மனமிரங்கி வந்திருக்கிறார். அவருக்கான சம்பளத்தைக் கொடுக்க தயாரிப்பாளர் மனோபாலாவும் ஒப்புக்கொண்டார். ரிலீஸ் தாமதத்தால் வட்டி எக்கச்சக்கமானதில் மனோபாலாவுக்கு மிகுந்த மனவருத்தம். படம் ரிலீஸை நோக்கி நகர்வதால், சற்றே நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் மனோபாலா.

திருமண முறிவுக்குப் பிறகு, சறுக்கலோ, சங்கடமோ இல்லாமல் விறுவிறு வேகத்தில் பயணிக்க முடிவெடுத்திருக்கிறார் சமந்தா. ‘யசோதா’ என்கிற ஐந்து மொழிப் படத்தில் நடிக்கும் சமந்தா, கதைத் தேர்வில் மிகுந்த கவனம் காட்டுகிறார். ‘அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ்’ என்கிற சர்வதேசப் படத்தின் கதை மிகவும் பிடித்துப்போக, அதில் நடிக்க உடனே அக்ரிமென்ட் போட்டிருக்கிறார். ‘என் தனிப்பட்ட வாழ்வை நினைவூட்டுகிற கதை’ என்றாராம் நெருக்கமானவர்களிடம்.

உஷ்…

வயசுப் பசங்களுக்கான படத்தைச் செய்த இயக்குநரிடம், நீளத்தைக் குறைக்கச் சொல்லி நிறைய பேர் வற்புறுத்தினார்களாம். முதல் பட இயக்குநராக இருந்தாலும் அவர் உறுதியாக மறுத்துவிட்டாராம். ரிலீஸுக்குப் பிறகு, படத்தின் நீளமே பிரச்னையாக அமைய, வேறு வழியின்றி குறைத்திருக்கிறார்கள். ஆனால், இந்தக் குழப்பமே படத்தின் வசூலை பஞ்சராக்கியதுதான் வேதனை. #என்னாச்சு... ஏதாச்சு... ஏதேதோ ஆயாச்சு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism