Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

‘பிக் பாஸ்-4’ நிகழ்ச்சியில் பாப்புலரான சம்யுக்தா, அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்ததும் நிறைய பட வாய்ப்புகள் வந்திருக்கின்றனவாம்.

மிஸ்டர் மியாவ்

‘பிக் பாஸ்-4’ நிகழ்ச்சியில் பாப்புலரான சம்யுக்தா, அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்ததும் நிறைய பட வாய்ப்புகள் வந்திருக்கின்றனவாம்.

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

* ராஜமெளலி இயக்கத்தில் உருவாகும் ‘RRR’ படத்தில் இடம்பெறும் பிரமாண்ட சண்டைக் காட்சியை 50 நாள்களாக எடுத்து முடித்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. இந்த ஷெட்யூலிலிருந்து படப்பிடிப்பில் பாலிவுட் நடிகை ஆலியா பட் இணைந்திருக்கிறார். இதில் அவர், ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஆலியா நடிக்கும் முதல் தெலுங்குப் படம் இது.

மிஸ்டர் மியாவ்

* ‘பிக் பாஸ்-4’ நிகழ்ச்சியில் பாப்புலரான சம்யுக்தா, அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்ததும் நிறைய பட வாய்ப்புகள் வந்திருக்கின்றனவாம். அவற்றில், விஜய் சேதுபதி நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ படமும் ஒன்று. அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இப்போது நடித்துவருகிறார். இதில் மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா என இரு நாயகிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ்டர் மியாவ்

* பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவான ‘ஒரு பக்க கதை’ திரைப்படம் பல வருடங்களாக வெளிவராமலேயே இருந்தது. அந்தப் படம் ‘ஜீ 5’ தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படும் என்ற அறிவிப்பு வந்தும் இரண்டு வருடங்களாகிவிட்டன. இந்தநிலையில், அந்தப் படத்தை டிசம்பர் 25-ம் தேதி ‘ஜீ 5’ தளத்தில் வெளியிடுகின்றனர்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

* ‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி, பயங்கர சென்சேஷன் ஆனவர் ஷாலினி பாண்டே. தமிழில் ‘கொரில்லா’, ‘100% காதல்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது, இந்தியில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக ‘ஜெயேஷ்பாய் ஜோர்தார்’ என்ற படத்தில் கமிட்டாகி நடித்துவருகிறார். அதேசமயம், அமீர் கானின் மகன் ஜூனைத் கான் அறிமுகமாகும் பாலிவுட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

* நடிகை அனுஷ்கா கோலிவுட், டோலிவுட் எனப் படு பிஸியாக இருந்தார். ‘பாகுபலி 2’ படத்துக்குப் பிறகு, அவர் பெரிதாக எந்தப் படத்தையும் கமிட் செய்யவில்லை. கடந்த மூன்று வருடங்களில் ‘பாகமதி’, ‘சைரா நரசிம்ம ரெட்டி’ (கேமியோ ரோல்), ‘சைலன்ஸ்’ ஆகிய மூன்று படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். 2021-லிருந்து மீண்டும் பழைய ஃபார்முக்கு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அனுஷ்கா, நிறைய கதைகள் கேட்டுவருகிறாராம்.