Published:Updated:

மிஸ்டர் மியாவ் - ஆலியா பட்

ஆலியா பட்
பிரீமியம் ஸ்டோரி
ஆலியா பட்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி மீண்டும் இணையப்போவதாகத் தொடர்ந்து பேசப்படுகிறது.

மிஸ்டர் மியாவ் - ஆலியா பட்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி மீண்டும் இணையப்போவதாகத் தொடர்ந்து பேசப்படுகிறது.

Published:Updated:
ஆலியா பட்
பிரீமியம் ஸ்டோரி
ஆலியா பட்

‘ஆர்.ஆர்.ஆர்’ பட புரோமோஷனுக்காக, பட்டுப்புடவையில் தமிழ்ப் பெண்போல் சென்னைக்கு வந்த ஆலியா பட், “எல்லாருக்கும் வணக்கம்” என்று தமிழில் சொல்லி அசத்தினார். முதன்முறையாகத் தென்னிந்திய சினிமாவில் அடியெடுத்துவைக்கும் ஆலியா பட், தமிழில் மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடிக்கத் தயாராக இருக்கிறாராம். ஏற்கெனவே ஆலியாவைத் தமிழுக்குக் கொண்டுவர ஏ.ஆர்.முருகதாஸ் முயன்றாராம். ‘ஹீரோயின் ஓரியன்டட் படமாக இருந்தால் டபுள் ஓகே’ என்கிறாராம் ஆலியா பட்.

அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கும் ‘அயோத்தி’ படத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுநராக நடிக்கிறார் சசிகுமார். அயோத்தியிலிருந்து ராமேஸ்வரத்துக்கு ஆன்மிகப் பயணம் வருகிற ஒரு வட இந்தியக் குடும்பம் தமிழகத்தை எப்படிப் பார்க்கிறது என்பதுதான் கதையாம். மதுரையில் ஆதரவற்றோர் சடலங்களை அடக்கம் செய்யும் இளைஞர் ஒருவரின் உண்மைக்கதையையும் இதோடு சேர்த்து திரைக்கதை ஆக்கியிருக்கிறார்களாம். ‘சர்ச்சைகளுக்குக் குறைவில்லாத படமாக இருக்கும்’ என்கிறார்கள் யூனிட்டில்.

தமிழில் பெரிய ஹிட் அடித்திருக்கும் சிம்புவின் ‘மாநாடு’ படத்தைத் தெலுங்கிலும் டப் செய்து வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள். டப்பிங் பணிகளும் முடிந்திருந்த நிலையில், சிம்புவும் தெலுங்கில் புரொமோஷன் வேலைகளுக்குத் தயாரானார். ஆனால், ‘மாநாடு’ தமிழில் பெரிய கலெக்‌ஷனைக் கொடுக்க, டப்பிங்குக்கு பதிலாக ரீமேக் ரைட்ஸை தெலுங்கில் நல்ல விலைக்குக் கொடுக்கத் திட்டமிடுகிறாராம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. ‘மாநாடு’ படத்தின் மூலமாகத் தெலுங்குப் பக்கமும் கால்வைக்க நினைத்த சிம்புவுக்கு இது பெருத்த பின்னடைவாக அமைந்திருக்கிறது.

மிஸ்டர் மியாவ் - ஆலியா பட்
மிஸ்டர் மியாவ் - ஆலியா பட்
மிஸ்டர் மியாவ் - ஆலியா பட்

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில், தனக்கான ஷூட்டிங் முடிந்ததாக வீடியோ வெளியிட்டிருக்கும் பூஜா ஹெக்டே, “நிச்சயம் விஜய்யுடன் சேர்ந்து இன்னொரு படத்தில் நடிப்பேன்” என நம்பிக்கையாகச் சொல்லிவருகிறார். ‘படம் முடிந்தாலும் பழக்கவழக்கம் தொடரும்’ என விஜய், இயக்குநர் நெல்சன் இருவருடனும் நட்பு பாராட்டும் பூஜா ஹெக்டே, தமிழில் முதன்மை இடத்தைப் பிடித்தே தீருவது என உறுதிகாட்டுகிறார். அதனால், கதைத் தேர்வில் மிக கவனமாக இருக்கிறார்.

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி மீண்டும் இணையப்போவதாகத் தொடர்ந்து பேசப்படுகிறது. இன்றைய டிரெண்டுக்கு ஏற்ற வகையில், ரஜினிக்குக் கதை அமைக்க வேண்டும் எனத் தன் குழுவினருடன் தொடர்ந்து விவாதம் நடத்திவருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். இரட்டை வேடத்தில் கதாநாயகன், வில்லன் என ரஜினி நடித்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறாராம். ஆனால், ‘இன்றைய யூத் இயக்குநரின் கதை; அனுபவம் பெற்ற கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கம்’ எனத் திட்டமிடுகிறாராம் ரஜினி.

உஷ்…

நீண்டகாலமாகத் தன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத வருத்தத்தில் இருக்கிறார் முதல் மரியாதைக்குரிய இயக்குநர். நல்ல விலைக்கு ஓடிடி நிறுவனங்களுக்கு விற்கவும் மெனக்கெடுகிறார். ஆனால், குறைவான விலைக்குக் கேட்கக்கூட யாரும் முன்வரவில்லையாம். சாட்டிலைட் உரிமைக்காகச் சில சேனல்களை அணுகியபோதும் உரிய மரியாதை கிடைக்கவில்லையாம். # பூங்காத்து திரும்புமா... ஏம் பாட்டை விரும்புமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism