Published:Updated:

மிஸ்டர் மியாவ்

அமலா பால்
பிரீமியம் ஸ்டோரி
News
அமலா பால்

‘நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வழங்கும்’ என்றுதான் அதிகாரபூர்வ அறிக்கையே வெளியாகிறது.

மிஸ்டர் மியாவ்

* ‘கடாவர்’, ‘அதோ அந்த பறவை போல’ ஆகிய படங்கள் அமலா பாலின் கைவசமுள்ளன. இதற்கிடையில், ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ தெலுங்கு ரீமேக்கிலும் கமிட்டாகியிருக்கிறார். இவை தவிர, அல்லு அர்ஜுனுடைய ‘ஆஹா ஒரிஜினல்ஸ்’ ஓடிடி தளம் தயாரிக்கும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்கிறார். ‘யூ டர்ன்’ படத்தை இயக்கிய பவன் குமார்தான் இயக்குநர். ‘தலைவா’ படத்துக்குப் பிறகு, அமலா பால் இந்த வெப் சீரிஸில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

* ஒரு பக்கம் ஷூட்டிங், இன்னொரு பக்கம் படங்களை வாங்கி வெளியிடுவது என நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் செம பிஸியாக இருக்கிறார்கள். ‘ரெளடி பிக்சர்ஸ்’ சார்பில் ‘ராக்கி’, ‘கூழாங்கல்’ ஆகிய இரண்டு படங்களை வாங்கி வெளியிடுகிறார்கள். ‘நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வழங்கும்’ என்றுதான் அதிகாரபூர்வ அறிக்கையே வெளியாகிறது. நயன்தாராவுக்கு தமிழில் ‘அண்ணாத்த’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல், மலையாளத்தில் ‘நிழல்’, ‘பாட்டு’ என நான்கு படங்கள் கைவசம் இருக்கின்றன. தவிர, இரண்டு கதைகள் கேட்டு ஓகே செய்தும் வைத்திருக்கிறார். எல்லோரும் எதிர்பார்த்திருக்கும் திருமணச் செய்தியை எப்போது அறிவிக்கவிருக்கிறார் என்பதுதான் தெரியவில்லை.

மிஸ்டர் மியாவ்

* ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் நடித்த மாளவிகா மோகனன், அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து, ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே கூட்டணியில் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றிலும் கமிட்டாகியிருக்கிறார். அமேஸான் ப்ரைமில் வெளியாகும் இந்த வெப் சீரிஸில், விஜய் சேதுபதியும் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரும் நாயகர்களாக நடிக்கவிருக்கிறார்கள்.

உஷ்...

* ‘வீக் எண்ட்’ நாள்களில் அந்தப் ‘பெரிய வீட்டு’க்குள் இருப்பவர்களின் பஞ்சாயத்துகளைப் பைசல் செய்யக் கிளம்பிவிடுகிறவரின் சொந்த வீட்டுக்குள் கடந்த சில நாள்களாகவே சலசலப்பு என்கிறார்கள். மூத்த மகளுக்கு அப்பாவுடன் கொஞ்சம் மனக்கசப்பாம்... ‘யார் யாரோ லட்ச ரூபாய்க்குச் செருப்பு வாங்கி போடுறதுக்கெல்லாம் இவரு சம்பாத்தியம்தான் கிடைச்சுதா... இது இப்படியே போனா, எங்க கதி என்னாகுறது’ என நெருங்கிய நட்பு வட்டத்தில் ஆதங்கத்தைப் புலம்பலாக வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கிறாராம் அந்த மகள்!

* அண்ணாத்த கிளம்பி வந்ததற்கு கொரோனா பயம் மட்டும் காரணமில்லையாம். ஷுட்டிங்கில் நெல் தூற்றுகிற மாதிரியான காட்சி ஒன்றில் நடிக்கும்போது, அண்ணாத்தைக்கு டஸ்ட் அலர்ஜி ஆகி கிறுகிறுத்துப்போக, யூனிட்டே கதிகலங்கிவிட்டதாம். டைரக்டர் பயந்துபோய், ``தலைவா... நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க ப்ளீஸ்’’ என்று ஷெட்யூலுக்கே பிரேக் விட்டுவிட்டாராம்!