சினிமா, ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கும் சன்னி லியோன், தற்போது ஆன்லைன் தளம் ஒன்றுக்காக காமெடி ஷோ ஒன்றில் தோன்றவிருக்கிறார். அதில் வரும் சம்பளத்தை, மும்பையில் உள்ள புனித கேத்ரின் ஆதரவற்றோர் காப்பகத்துக்குக் கொடுக்க முடிவு செய்துள்ளாராம்.

அறிமுக இயக்குநர் ஆல்பர்ட் ராஜா இயக்கத்தில் ஆரி நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் லாஸ்லியா ஹீரோயினாக ஏற்கெனவே ஒப்பந்தமாகி இருக்கிறார். அவருடன் இன்னொரு நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். இந்த இருவர் தவிர, ‘பிக்பாஸ்’ அபிராமியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தைத் தயாரித்து இயக்கவிருக்கிறார் விக்னேஷ் சிவன். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இந்தப் படத்துக்கு இசை அனிருத்.

‘எஃப்.ஐ.ஆர்’, ‘காதலிக்க யாருமில்லை’, ‘ஆலிஸ்’ என மூன்று படங்களை கைவசம் வைத்திருக்கும் ரைசா, தற்போது ‘ஹேஷ்டேக் லவ்’ என்ற படத்தையும் கமிட் செய்துள்ளார். ‘மீண்டும் ஒரு காதல் கதை’ படத்தில் நடித்திருந்த வால்டர் பிலிப்ஸ்தான் இந்தப் படத்தின் ஹீரோ. ‘கலைப்புலி’ தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராக இருந்த பாஸ்கோ இயக்கவிருக்கிறார்.
‘குயின்’ வெப் சீரிஸில் லீட் ரோலில் நடித்திருந்த அஞ்சனா ஜெயப்பிரகாஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இதனால் மலையாளத்தில் ஃபஹத் பாசில் நடிக்கும் படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதால், செம குஷியில் இருக்கிறாராம் அஞ்சனா.
ம்யூட்
ரெளடி இயக்குநர் இயக்கத்தில் ஹீரோ நடிகர் நடிப்பதாக இருந்த படத்தை இரண்டெழுத்து பெரிய நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. அந்த நிறுவனம் படக்குழுவிலிருந்து திடீரென வெளியேறியதால், வேறு சில தயாரிப்பாளர்களை அணுகினார் இயக்குநர். ஆனால், வொர்க்-அவுட் ஆகவில்லை. எனவே, வேறொரு படத்தை ஆரம்பித்து, அவரே தயாரித்து இயக்க முடிவு செய்துவிட்டார். இதனால், அவர் இயக்கத்தில் ஹீரோ நடிகர் நடிக்கும் படம் டிராப் என்று பேச்சு கிளம்பியுள்ளது.