‘தபாங் 3’ படத்தை தொடர்ந்து பிரபுதேவா - சல்மான் கான் கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘ராதே’. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக திஷா படானி நடித்துவருகிறார். தவிர ஜாக்கி ஷெராப், பரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். `ராதே’ படத்தின் க்ளைமாக்ஸ் கிராஃபிக்ஸ் வேலைகளுக்கு மட்டும் ஏழு கோடி ரூபாய் செலவழித்துள்ளனராம்!

பாலிவுட்டில் ஹிட்டான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குநர் மோகன் ராஜா இயக்க, பிரசாந்த் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருக்கிறார் பிரசாந்த். இந்தியில் தபு நடித்த கேரக்டரில் நடிக்க, ரம்யா கிருஷ்ணனை அணுகியுள்ளது படக்குழு.

பாலிவுட் நடிகை பர்வீன் பாபி பயோபிக்கில் அமலா பாலை நடிக்கவைக்க, பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறதாம். பாலிவுட்டில் கிளாமர் ரோல்களுக்கு பேர்போன நடிகைகளில் பர்வீன் பாபி முக்கியமானவர். தவிர, அந்தக் காலகட்டத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகையும் இவர்தான்.

அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை முடித்துவிட்டு, க்ளைமாக்ஸ் காட்சிகளை எடுப்பதற்காக சுவிட்சர்லாந்து செல்ல இருக்கிறது படக்குழு. அங்குதான் அஜித்துக்கான ஆக்ஷன் மற்றும் கார் சேஸிங் காட்சிகளை எடுக்க இருக்கின்றனர்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் `குந்தவை’ கேரக்டரில் நடிக்கவிருக்கிறார் த்ரிஷா. தற்போது மோகன்லாலுடன் ‘ராம்’ படத்தில் நடித்துவரும் இவர், விரைவில் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் கலந்துகொள்வாராம்.

தர்மசங்கடமான நிலையில் இருக்கிறார் தளபதி நடிகர். குடும்ப சென்டிமென்ட் இயக்குநர் சொன்ன கதை நடிகருக்குப் பிடித்துவிட ‘ஓகே’ சொல்லிவிட்டார். ஆனால் தயாரிப்புத் தரப்போ, ‘அந்த இயக்குநர் வேண்டாம். விசில் இயக்குநர்தான் வேண்டும்’ என்கிறதாம். கடைசிப் படத்தின் பட்ஜெட்டை எக்கச்சக்கமாக ஏற்றிவிட்டதில், விசில் இயக்குநர்மீது நடிகருக்குக் கோபம். ஆனால், தற்போதைய தயாரிப்புத் தரப்போ, ‘பட்ஜெட் பிரச்னையில்லை. அந்த இயக்குநர்தான் வேண்டும்’ என்கிறதாம்.