ஹீரோயின் சென்ட்ரிக் படம் ஒன்றில் ஜோதிடராக நடித்துவருகிறார், நடிகை ரெஜினா கஸாண்ட்ரா. கார்த்திக் ராஜு இயக்கிவரும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்ததையடுத்து, அடுத்தகட்ட படப்பிடிப்பை குற்றாலத்தில் தொடங்கியுள்ளனர். இதில் ரெஜினாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ‘ஆரம்பம்’ அக்ஷரா கெளடாவும் நடித்துவருகிறார்.

வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் வெப் சீரிஸில் வைபவ், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பத்து எபிஸோடுகள்கொண்ட இந்த வெப் சீரிஸுக்கு ‘லைவ் டெலிகாஸ்ட்’ எனப் பெயர் சூட்டியுள்ளனர். ஹாட் ஸ்டாரில், பிப்ரவரி 14-ம் தேதியன்று வெளியாகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தெலுங்கில் மிக பிரமாண்டமாக உருவாகிவரும் ‘RRR’ படத்தில் அஜய் தேவ்கன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன. அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த ஜோடி ஏற்கெனவே ‘த்ரிஷ்யம்’ இந்தி ரீமேக்கில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் பயோபிக்குக்காக தன்னை தயார்செய்துவருகிறார் டாப்ஸி. ‘சபாஷ் மித்து’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, ராகுல் தோலக்கியா இயக்குகிறார். ‘5.2.2021 அன்று படம் வெளியாகும்’ என அறிவித்துள்ளது படக்குழு.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனனை அணுகியுள்ளதாம் படக்குழு.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லட்சுமி பிரியா சந்திரமெளலி, லால் ஆகியோர் நடிக்கும் ‘கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்துக்காக ‘96’ படத்தில் சிறுவயது த்ரிஷாவாக நடித்த கெளரி கிஷன் லேட்டஸ்ட்டாக ஒப்பந்தமாகியிருக்கிறார். விஜய் - விஜய்சேதுபதி காம்போவில் உருவாகிவரும் ‘மாஸ்டர்’ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் கௌரி கிஷன்.
ம்யூட்
மூன்றெழுத்து இளம் இயக்குநர் இந்தியில் பாட்ஷா நடிகரை வைத்து இயக்குவதாக இருந்த படம் தாமதமாகிக்கொண்டே வருகிறது. அதை தயாரிக்க இருந்த பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் அந்தப் படத்துக்கு இன்ஷூரன்ஸ் வேண்டி முறையிட்டபோது, அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் இயக்குநர் பற்றி விசாரித்திருக்கிறது. அப்போது, ‘அந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு தேவையில்லாத செலவு அதிகம்வைப்பார், அவர் படங்களைத் தயாரித்த நிறுவனத்துக்கு பெரிதாக லாபம் கிடைக்கவில்லை’ போன்ற புகார்கள் வந்ததுதான் தாமதத்துக்கு காரணம் என்கின்றனர்.