Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

நெல்சன் முதலில் சொன்ன ஒன்லைனில் ரஜினிக்குப் பெரிய அபிப்பிராயம் ஏற்படவில்லையாம்.

மிஸ்டர் மியாவ்

நெல்சன் முதலில் சொன்ன ஒன்லைனில் ரஜினிக்குப் பெரிய அபிப்பிராயம் ஏற்படவில்லையாம்.

Published:Updated:
ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

எப்போதுமே கதையோடு இயைந்துவரும் காமெடிக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பவர் ரஜினி. நெல்சன், இயல்பாகவே காமெடியில் அதகளம் செய்யக்கூடிய ஆள். அதனால், கதைக்குள் காமெடியை மழையாகப் பொழியவைக்க உத்தரவாதம் கொடுத்திருக்கிறாராம் நெல்சன். ‘அருணாச்சலம்’ படத்துக்குப் பிறகு, பக்கா காமெடி கதகளியாக இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள்!

`அண்ணாத்த’ படம் பெரிதாக சக்சஸ் பெறாவிட்டாலும், இயக்குநர் சிவா வேலை வாங்கியவிதம் ரஜினிக்கு ரொம்பவே பிடித்துப்போனதாம். கொரோனா நெருக்கடி நேரத்திலும் ரஜினியைப் படப்பிடிப்புக்காக அவசரப்படுத்தாமல், அவர் கொடுத்த தேதியில் மட்டுமே ஷூட்டிங் வைத்தார் சிவா. அதனால் மீண்டும் சிவாவுடன் கைகோக்கவே ரஜினி விரும்பினார். சிவா சொன்ன ஒன்லைனும் ரஜினிக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், சன் பிக்சர்ஸ், `சிவா வேண்டாம்’ என்பதில் உறுதியாக நிற்க, ரஜினியால் ஒன்றும் சொல்ல முடியவில்லையாம்!

கடந்த வருடமே வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ரஜினி மிகவும் ஆவலாக இருந்தார். “எனக்காக ஒரு கதை செய்யுங்கள்” என ரஜினியே வெற்றிமாறனிடம் வேண்டுகோள் வைத்திருந்தாராம். வெற்றிமாறனுக்கும் ரஜினியோடு படம் செய்ய ஆசைதான். ஆனால், 40 நாள்களில் முடித்துக்கொடுப்பதாகச் சொன்ன ‘விடுதலை’ படம், 150 நாள்களைத் தாண்டி ஷூட்டிங் போகிறது. சூர்யாவுடன் ‘வாடிவாசல்’, சூரியுடன் இன்னொரு படம், அற்புதம்மாள் வாழ்வு குறித்த படம் என அடுத்தடுத்த லைன்-அப் பெரிதாக இருப்பதால், வெற்றிமாறானால் ரஜினிக்குக் கதை செய்ய முடியாத நிலை. இந்த இக்கட்டுகளை வெற்றிமாறன் வெளிப்படையாகச் சொல்லி விலகிக்கொள்ள, அதன் பிறகே நெல்சன் அழைக்கப்பட்டாராம்!

மிஸ்டர் மியாவ்

இந்தப் படத்துக்கு நெல்சன் கேட்ட சம்பளம் 40 கோடியாம். ரஜினியே இதைக் கேட்டு மலைத்துப்போக, சன் பிக்சர்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. “நானும் அட்லியும் ஒரே நேரத்தில்தான் சினிமாவுக்கு வந்தோம். அவர் வாங்குற அளவுக்கு நான் சம்பளம் கேட்டால் என்ன தவறு?” என தைரியமாக நெஞ்சை உயர்த்தினாராம் நெல்சன். ஒருவழியாக ஆளைச் சரிக்கட்டி 25 கோடிக்குச் சம்மதிக்க வைத்திருக்கிறார்களாம்!

நெல்சன் முதலில் சொன்ன ஒன்லைனில் ரஜினிக்குப் பெரிய அபிப்பிராயம் ஏற்படவில்லையாம். ஆனால், கலாநிதி மாறனுக்கு அந்த ஒன்லைன் ரொம்பவே பிடித்துப்போனதாம். பிறகு நெல்சனின் ஜாதகத்தை வாங்கிப் பார்த்திருக்கிறார்கள். ‘கல்லைத் தொட்டாலும் பவுனாகும் ஜாதகம்’ எனச் சொன்னாராம் சோதிடர். பிறகே நெல்சன் கதைக்கு ஓகே சொல்லியிருக்கிறார் ரஜினி!

`அண்ணாத்த’ படத்துக்குப் பேசப்பட்ட சம்பளத்தைவிட, இந்தப் படத்தில் ரஜினிக்குக் குறைவுதானாம். `அண்ணாத்த’ படத்தின் நஷ்டத்துக்குப் பொறுப்பேற்பதாகச் சொல்லி, ரஜினியும் டிமாண்ட் பண்ணவில்லையாம். இவ்வளவு சீக்கிரமாக அடுத்த படத்தைத் தொடங்கவேண்டிய நிர்பந்தத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் ரஜினிக்கு ஏற்படுத்தியது என்கிறார்கள்!