Published:Updated:

மிஸ்டர் மியாவ்

சிவாத்மிகா
பிரீமியம் ஸ்டோரி
News
சிவாத்மிகா

விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஷ்வர்யா ராஜேஷ்...

யுவன் ஷங்கர் ராஜா இசையில், இந்தியில் உருவாகியிருக்கும் ‘டாப் டக்கர்’ ஆல்பத்தில் நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா, அதில் சற்றே கிளாமரையும் சேர்த்திருக்கிறார். ‘பாலிவுட் ஆல்பத்துக்கே கிளாமரைக் கூட்டியிருக்கும் ராஷ்மிகா, பாலிவுட்டில் அறிமுகமாகும் படத்தில் எப்படி நடிக்கப்போகிறாரோ...’ என அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கும் ‘மிஷன் மஜ்னு’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் தொடங்கியிருக்கிறது.

சிம்புவுடன் ‘பத்து தல’, இயக்குநர் பத்ரி இயக்கத்தில் ஓர் ஆக்‌ஷன் படம் என நடித்துவரும் கெளதம் கார்த்திக், இயக்குநர் நந்தா பெரியசாமியின் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படம் முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் உருவாகும் படமாம். இது ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்டுவந்த நிலையில், தற்போது அதை மறுத்திருக்கிறார் இயக்குநர். இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக்குக்கு ஜோடியாக நடிகர் ராஜசேகரின் இரண்டாவது மகள் சிவாத்மிகா நடிக்கிறார்.

சிவாத்மிகா
சிவாத்மிகா

தனது புகைப்படங்களாலும் பேட்டிகளாலும் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தும் நடிகை அனிகா, தற்போது மலையாளத்தில் வெளியான ‘கப்பேலா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிஸியாக நடித்துவருகிறார். இந்தப் படத்தை முடித்த பிறகு, நடிகர் நாகர்ஜூனாவுடன் த்ரில்லர் படமொன்றில் நடிக்கும் அனிகாவுக்கு, அதில் மிக முக்கியமான கதாபாத்திரமாம்.

‘காடன்’, ‘ஜெகஜால கில்லாடி’, ‘எஃப்.ஐ.ஆர்’ என ரிலீஸுக்காக மூன்று படங்களை முடித்துவைத்திருக்கும் நடிகர் விஷ்ணு விஷால், அடுத்ததாக முரளி கார்த்திக் இயக்கத்தில் ‘மோகன் தாஸ்’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் அறிவிப்புக்காக வெளியிட்ட வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்ததால், மிகுந்த எதிர்பார்ப்போடு இதன் படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

உஷ்!

இன்ஸ்டாகிராமில் ஏக கிளாமராகப் பதிவிட்டிருந்த புகைப்படங்களையெல்லாம் அகற்றியிருக்கிறார், நாலு மணி நடிகை. ‘மிஷன் கம்ப்ளீட் ஆன பிறகு ஆதாரங்களை அழிக்கறதுதானே புத்திசாலித்தனம்’ என்கிறார்கள் அம்மணியின் டார்கெட் ரகசியம் தெரிந்தவர்கள்!