அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

கிளாமர் ரூட்டில் இன்ஸ்டாவில் பயணித்துவந்த திவ்ய பாரதி, முதல் படத்திலேயும் கிளாமருக்கு கிரீன் சிக்னல் காட்டியிருக்கிறாராம்.

சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்த வாணி போஜனுக்கு ஜெய், அசோக் செல்வன், வைபவ் என வளர்ந்துவரும் நடிகர்களோடு மட்டுமே நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. தற்போது வாணி போஜனுக்கு ஜாக்பாட் அடித்ததைப்போல், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. இதனால், அதீத சந்தோஷத்திலிருக்கும் வாணி, தனது கையிலிருக்கும் படங்களைச் சீக்கிரமாக முடித்துவிட்டு, மார்ச் மாத இறுதிக்குள் விக்ரம் படத்தில் இணைகிறார்.

சமீபத்தில் ஓடிடி-யில் வெளியாகி, பலரது கவனத்தையும் ஈர்த்த மலையாளப் படமான, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தைத் தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கியிருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்தப் படத்தை ரீமேக் செய்கிறார். அதில் நடிப்பதற்கு, இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகர் - நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடபெற்றுவருகிறது. மார்ச் மாதம் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கும் நிலையில், படத்துக்கான ஒளிப்பதிவுக்கு பி.ஜி.முத்தையாவும், வசனம் எழுதுவதற்கு பட்டுக்கோட்டை பிரபாகரும் கமிட்டாகியிருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

`பிக் பாஸ்’ மூன்றாவது சீஸனின் வின்னர் முகென், ‘வெப்பம்’ பட இயக்குநர் அஞ்சனாவின் இயக்கத்தில் தனது முதல் படத்தை கமிட் செய்திருந்தார். தற்போது, கவின் கிருஷ்ணமூர்த்தியின் இயக்கத்தில் தனது இரண்டாவது படத்தையும் ஆரம்பித்திருக்கிறார். இதில் பிரபு, சூரி, தம்பி ராமையா எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. இந்தப் படத்தில் முகெனுக்கு ஜோடியாக ‘கென்னடி கிளப்’ படத்தில் கவனம்பெற்ற மீனாட்சி நடிக்கிறார்.

கிளாமர் ரூட்டில் இன்ஸ்டாவில் பயணித்துவந்த திவ்ய பாரதி, முதல் படத்திலேயும் கிளாமருக்கு கிரீன் சிக்னல் காட்டியிருக்கிறாராம். செவ்வாய் கிரகத்தில் இறங்கிய நாசாவின் ‘பெர்சீவரன்ஸ்’ விண்கலமாக, இளைஞர்கள் இதயத்தில் இவரது கவர்ச்சி அம்பு இறங்குவது உறுதி என்று ‘பேச்சிலர்’ படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக இவர் நடிக்கும் ‘பேச்சிலர்’ திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

உஷ்...

பிரமாண்ட இயக்குநரைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் மற்றுமொரு கமர்ஷியல் இயக்குநரும் தெலுங்கில் படம் இயக்குவதற்காகக் கிளம்பிவிட்டார். இவர்களைத் தொடர்ந்து இன்னும் சில முக்கியமான இயக்குநர்களும் தெலுங்கு சினிமா பக்கம் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார்கள். இவர்களின் இந்த முடிவுக்கு, தமிழ் சினிமா உலகின் மீதிருக்கும் அதிருப்திதான் காரணமாம். சமீபகாலமாக, தயாரிப்பாளர்கள் வைக்கும் பட்ஜெட் நிபந்தனைகளும், படங்களின் ரிலீஸில் இருக்கும் பிரச்னைகளுமே அவர்களின் அதிருப்திக்குக் காரணம் என்கிறார்கள்!