அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

ஜெயலலிதாவின் பயோபிக்கான ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக நடித்திருக்கிறார் நடிகை கங்கனா ரணாவத்.

தமிழ், மலையாளம் என பிஸியாகவே இருக்கிறார் நடிகை ரம்யா நம்பீசன். இவரது நடிப்பில் ‘தமிழரசன்’, ‘ரேஞ்சர்’, ‘பிளான் பண்ணி பண்ணனும்’ ஆகிய சில படங்கள் வெளியாகாமல் இருக்கின்றன. தற்போது, பிரபுதேவாவுக்கு ஜோடியாக ‘மை டியர் பூதம்’ என்ற ஃபேன்டஸி படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ‘மஞ்சப்பை’, ‘கடம்பன்’ ஆகிய படங்களை இயக்கிய ராகவன் இயக்குகிறார்.

‘தும்பா’ படத்தில் அறிமுகமான அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன், மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான ‘ஹெலன்’ படத்தின் ரீமேக்கில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது, ‘நான் மகான் அல்ல’, ‘அந்தகாரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த வினோத் கிஷனுக்கு ஜோடியாக ஒரு ரொமான்டிக் காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

ஜெயலலிதாவின் பயோபிக்கான ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக நடித்திருக்கிறார் நடிகை கங்கனா ரணாவத். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவரும் நிலையில், இன்னோர் அரசியல் படத்தில் இந்திரா காந்தியாக நடிக்கவிருக்கிறார். ஆனால், இது இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் இல்லையாம்.

டாப்ஸியின் கரியர் நாளுக்கு நாள் ஆச்சர்யத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. டாப்ஸி தேர்ந்தெடுக்கும் படங்களுக்குத் தனி ரசிகர்கள் உருவாகிவிட்டனர். லாக்டெளன் முடிந்ததும் விஜய் சேதுபதியுடன் தமிழ்ப் படம் ஒன்றில் நடித்தவர், அடுத்து ‘ராஷ்மி ராக்கெட்’ என்ற படத்தில் தடகள வீராங்கனையாக நடித்து முடித்த கையோடு, இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் பயோபிக்கில் நடிக்கத் தீவிரமாக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

மிஸ்டர் மியாவ்

உஷ்...

திரை வணிகத்தில் இருப்பவர்களின் வயிற்றில் பால்வார்த்த, சமீபத்திய படத்துக்கு வெற்றிக்கொண்டாட்டம் நடந்திருக்கிறது. படத்தைப் பற்றிய விமர்சனங்களில் வில்லன் நடிகர் அதீத பாராட்டுப் பெற்றதைப் புரிந்துகொண்ட ஹீரோ, “என்னைவெச்சு செஞ்சுட்டீங்கள்ல?” என்று இயக்குநர் தரப்பிடம் வருத்தத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், கிண்டலாகச் சொன்னாராம். அந்தக் கொண்டாட்டத்துக்கும் லேட்டாக வந்து வில்லன் நடிகர் கெத்துகாட்ட, ஹீரோ ரொம்பவே அப்செட் ஆகியிருக்கிறார். “தாராவி சம்பந்தப்பட்ட படத்துல தலைவரையே ஏமாத்திப்புட்டாங்க... நமக்கு இந்தப் படத்துல இப்படி... இளம் டைரக்டர்ஸுக்குப் படம் பண்றப்ப கவனமா இருக்கணும்ணே...” என்று ஹீரோவின் நெருங்கிய வட்டாரங்கள் ஹீரோவுக்கு அட்வைஸ் மழையாம்!