பிரீமியம் ஸ்டோரி
  • அறிமுக இயக்குநர் டில்லி பிரசாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அதிதி ராவ், மஞ்சிமா மோகன் ஆகியோர் நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. அரசியல் நையாண்டி ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில், அரசியல் கட்சித் தலைவராக பார்த்திபன் நடிக்கிறார்.

  • தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’, மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லாலுடன் ‘ராம்’ என அடுத்தடுத்து பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார் த்ரிஷா. இந்நிலையில், தெலுங்கில் கொரடலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் ஹீரோயினாகவும் கமிட்டாகியுள்ளார்.

அதிதி ராவ்,  பிரியாமணி
அதிதி ராவ், பிரியாமணி
  • உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தற்போதைய தலைவருமான மாயாவதியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவுள்ளது. ‘மேடம் சீஃப் மினிஸ்டர்’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தை, சுபாஷ் கபூர் இயக்குகிறார். மாயாவதியாக ரிச்சா சத்தா நடிக்க உள்ளார். இவர், ஷகீலாவின் பயோபிக்கில் ஷகீலாவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்துக்குப் பிறகு, ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகும் ஹீரோயின் சென்ட்ரிக் படத்தில் பிந்து மாதவி நடித்துள்ளார். ஊட்டியில் 30 நாளில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கிவிட்டன.

மிருணாளினி,  ரிச்சா சத்தா
மிருணாளினி, ரிச்சா சத்தா
  • 2019-ம் ஆண்டு வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘சாம்பியன்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார் மிருணாளினி. இவை தவிர, பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமாருடன் ‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

  • ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் மஞ்சுவாரியர் நடித்த கேரக்டரில் நடிக்க ஸ்ரேயா, அனுஷ்கா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், தற்போது அந்த கேரக்டரில் பிரியாமணி நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ம்யூட்

  • விவாகரத்தான கிரிக்கெட் நடிகரும், விவாகரத்தான பேட்மின்டன் வீராங்கனையும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாயின. இருவரும் அவ்வப்போது ட்விட்டரில் ஒருவரை ஒருவர் டேக் செய்து ட்வீட் செய்துகொண்டு இருக்கின்றனர். இதனால் `இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள்’ என்ற செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவிவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு