`தி லஸ்ட் ஸ்டோரி’ என்ற இந்தி வெப் சீரீஸை, தெலுங்கில் அமலாபாலை வைத்து எடுக்கவுள்ளனர். இதற்காகவே தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுவருகிறாராம் அமலாபால்.

நயன்தாராவும் விக்னேஷ்சிவனும் பிரிந்துவிட்டதாக சமீபத்தில் வந்த செய்தியைத் தொடர்ந்து, பலரும் பலவிதமாகப் பேசத் தொடங்கினர். இந்நிலையில், இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நயன்.

இந்தியில் அதிக கவனம் செலுத்திவரும் மாதவன், லேட்டஸ்டாக நடித்துவரும் தமிழ் படம் `மாறா’. இதில் அவருக்கு ஜோடியாக ஷ்ரதா ஶ்ரீநாத் நடித்துள்ளார். `நெடுஞ்சாலை’, `அதே கண்கள்’ படத்தில் நடித்த ஷிவதாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

`மாஸ்டர்’ பட நாயகி மாளவிகா மோகனனின் சமீபத்திய போட்டோ ஷூட், ரசிகர்களை மட்டுமல்லாமல் இளம் இயக்குநர்களையும் ஈர்த்துள்ளது. இந்த போட்டோ ஷூட், தமிழில் தான் பெரிய ரவுண்டு வர உதவும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் மாளவிகா மோகனன்.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி, தழையத் தழைய புடவை உடுத்தி உற்சாக போஸில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். ஒரு நாயகி... உருவாகிறாள்!

பிரகாச நடிகரின் படத்தை முதலில் தயாரிக்கத் திட்டமிட்டாராம் பிரமாண்டத் தயாரிப்பாளர். அதை ஏற்க மறுத்த அசுர இயக்குநர், பரோட்டா நாயகனை இயக்கிய பிறகே, பிரகாச நடிகரை வைத்து ஷூட் நடத்தவிருப்பதாக கறார்காட்டியுள்ளாராம்.