‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘ஆக்ஷன்’ என ஹாரர் ஜானர்களிலிருந்து கொஞ்சம் விலகி இருந்த இயக்குநர் சுந்தர்.சி, தற்போது ‘அரண்மனை 3’ படத்தை இயக்கவிருக்கிறார். இதில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு, பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன் நடிக்கும் ‘கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடந்துவருகிறது. இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் லட்சுமி பிரியா சந்திரமெளலி.

நடிகை பார்வதியின் நீண்டநாள் ஆசை, இயக்குநர் ஆவது. அநேகமாக இந்த ஆண்டு இறுதியில் அது நிறைவேறும் என, தனக்கு நெருக்கமானவர்களிடம் உறுதிபூண்டுவருகிறார்!

‘பிங்க்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண், நிவேதா தாமஸ் நடிக்கிறார்கள். படத்தின் பெயர் ‘லாயர் சாப்’. தமன் இசையமைக்கிறார். இம்மாதம் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. நானியை வைத்து ‘மிடில் கிளாஸ் அப்பாயி’ படத்தை இயக்கிய வேணு ஸ்ரீராம் இந்தப் படத்தை இயக்குகிறார்.

விஜய் தேவரகொண்டாவின் ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ படம் காதலர் தினத்தன்று வெளியாவது நாம் அறிந்ததே. அடுத்ததாக பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘ஃபைட்டர்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கிவிட்டது. இதை நடிகை சார்மி, பூரி ஜெகன்நாத், கரண் ஜோஹர் இணைந்து தயாரிக்கின்றனர். தாய்லாந்தில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி மேற்கொண்ட வேகத்துடன் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

‘ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸுக்குப் பிறகு, பிரியாமணிக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. ‘தலைவி’, ‘அசுரன்’ தெலுங்கு ரீமேக், இந்தியில் அஜய் தேவ்கனுடன் ‘மெய்டான்’ என அசத்தக் காத்திருக்கிறார். ‘மெய்டான்’ படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் விலகியதால், அந்த கேரக்டர் பிரியாமணிக்கு கிடைத்திருக்கிறது.

தளபதி நடிகரின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே போகிறது. ஏற்கெனவே ஓகே சொல்லியிருக்கும் `அசுர’ இயக்குநர் மற்றும் மகிழ்ச்சியான இயக்குநர் ஆகியோர் தங்களது மற்ற படங்களை முடித்துவிட்டு வர தாமதமாகும் என்பதால், இடையே குடும்ப சென்டிமென்ட் பட இயக்குநரிடம் கதை கேட்டு வருகிறாராம்.