Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஆஷிமா நார்வால்
பிரீமியம் ஸ்டோரி
ஆஷிமா நார்வால்

பல தோற்றங்களில் விக்ரம்

மிஸ்டர் மியாவ்

பல தோற்றங்களில் விக்ரம்

Published:Updated:
ஆஷிமா நார்வால்
பிரீமியம் ஸ்டோரி
ஆஷிமா நார்வால்
  • ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்துக்குப் பிறகு, ஆரவ் நடிப்பில் ‘ராஜபீமா’ படம் வெளியாக இருக்கிறது. இதில் அவருக்கு ஜோடியாக ஆஷிமா நார்வால் நடிக்கிறார். தவிர, யாஷிகா ஆனந்துக்கும் முக்கியமான கேரக்டராம். அவர் க்ரைம் பத்திரிகையாளராக வருகிறாராம். அத்துடன், இந்தப் படத்தில் ஓவியா கேமியோ ரோலில் நடிக்கிறார்.

சாரா அலிகான்
சாரா அலிகான்
  • அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கும் படத்துக்கு ‘கோப்ரா’ எனப் பெயர் சூட்டியுள்ளனர். இதில் பல தோற்றங்களில் நடித்துவருகிறார் விக்ரம். படத்தின் பாதிப் படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், மீதமுள்ள காட்சிகளை ரஷ்யா மற்றும் ஐரோப்பாவில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். அதனால், பொங்கல் முடிந்து ஃபாரின் பறக்கவிருக்கிறது படக்குழு.

  • ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் அனுஷ்கா நடிக்கும் ஹீரோயின் சென்ட்ரிக் படம், ராணுவத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்படவிருக்கிறது. இதில் அனுஷ்காவுக்கு நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கின்றனவாம். 2020 மார்ச் மாதம் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
  • கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம், ‘எஃப்.ஐ.ஆர்’. இதில் மஞ்சிமா மோகன், ரைஸா, ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நாயகிகளாக நடித்துவருகின்றனர். இந்தப் படத்தில் முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்க இயக்குநர் கெளதம் மேனனை கமிட் செய்துள்ளது படக்குழு.

ஆஷிமா நார்வால்
ஆஷிமா நார்வால்
  • ‘நெடுநல்வாடை’ படத்தில் அறிமுகமாகி பரவலான பாராட்டுகளைப் பெற்ற நடிகை அஞ்சலி நாயர், தற்போது விதார்த் நடிக்கும் ‘நட்சத்ரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மிஸ்ட்ரி - த்ரில்லர் ஜானரில் உருவாகிவரும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் மனோஜ் ராம் இயக்குகிறார்.

அஞ்சலி நாயர்
அஞ்சலி நாயர்
  • பாலிவுட் நடிகர் சயீஃப் அலிகானின் மகளும் நடிகையுமான சாரா அலிகான், நீச்சல்குளத்தில் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கிவருகின்றன. இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஒரு படம், வருண் தவானுடன் ஒரு படம் என இரண்டு படங்கள் இவரின் கைவசம் உள்ளன.

ம்யூட்

  • மருமகன் நடிகர் இயக்கவிருக்கும் படத்தை ஃபைனான்ஸ் பிரச்னை காரணமாக, அதை கமிட் செய்திருந்த தயாரிப்பு நிறுவனம் கிடப்பில் போட்டது. சமீபத்தில் அந்தப் படம் சூரிய நிறுவனத்துக்குக் கைமாறிவிட்டது. படத்தில் நடிப்பதாக இருந்த பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் நடிகைகளின் கால்ஷீட் கிடைப்பதில் மட்டும் கொஞ்சம் சிக்கல் இருக்கிறதாம்.