Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாநகரம்’ படத்தை ‘மும்பைகர்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்கிறார் சந்தோஷ் சிவன்

மிஸ்டர் மியாவ்

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாநகரம்’ படத்தை ‘மும்பைகர்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்கிறார் சந்தோஷ் சிவன்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

* வாரம்தோறும் வியாழக்கிழமைகளில், `பிக் பாஸ்’ செட்டில் கோவிட் டெஸ்ட் எடுத்து, படு முன்னெச்சரிக்கையுடன்தான் இருந்துவந்தனர். அப்படியிருந்தும் சில தினங்களுக்கு முன்னர் எடுத்த டெஸ்ட்டில், டெக்னீஷியன்கள் நிறைய பேருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்துவிட்டதாம். இதனால் கமல் கலந்துகொள்ளும் வார இறுதி எபிசோடுகளின் ஷூட்டிங்கில் கட்டுப்பாடுகளை ரொம்பவே அதிகப்படுத்தியிருக்கிறார் களாம். நல்லவேளையாக வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் பக்கத்தில் இதுவரை செல்லவில்லை கோவிட்.

மிஸ்டர் மியாவ்

* தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாநகரம்’ படத்தை ‘மும்பைகர்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்கிறார் சந்தோஷ் சிவன். இதில் முனீஷ்காந்தின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. தமிழைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு என நடித்துவரும் விஜய் சேதுபதியின் முதல் பாலிவுட் படம் இது.

* ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, அஷ்வின் சரவணன் இயக்கும் படம், ‘தி ஃபேமிலி மேன்’ சீரீஸின் இரண்டாவது சீஸன் ஆகியவை சமந்தாவின் வசமுள்ளன. தற்போது ஆஹா ஒரிஜினல்ஸில் ‘சாம் ஜாம்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். ‘ருத்ரமாதேவி’ பட இயக்குநர் குணசேகர் அடுத்ததாக, சகுந்தலா - துஷ்யந்தன் காதல் கதையைப் படமாக்கவிருக்கிறாராம். அதில் சகுந்தலாவாக நடிக்க சமந்தாவிடம் பேசியிருக்கிறார்கள் என்று செய்தி!

உஷ்...

* வளர்ந்துவரும் ‘மதுரக்கார’ ஹீரோயின் இப்போது ரவுண்ட் அடிக்கும் ஆடி காரும் அவருக்குப் பரிசாக வந்ததுதானாம். அரசியலில் துளிர்த்துக்கொண்டிருக்கும் வாரிசிடமிருந்து பரிசாகப் பெற்றிருக்கிறார். ‘ம்ம்ம்... ஒரு படம் சேர்ந்து நடிச்சுட்டா ஒரு ஆடி’யா எனப் பெருமூச்சுவிட்டுப் பொருமுகிறார்கள் கோடம்பாக்கத்தில் சிலர்.

* வருத்தப்படாத நடிகரின் ‘வேற்றுகிரகப்’ படம் பலவித ஷெட்யூல்களுக்குப் பிறகு சமீபத்தில்தான் மீண்டும் தொடங்கியது. இப்போது ஹீரோயினுக்கு கோவிட் பாசிட்டிவ் வரவே மீண்டும் தள்ளிப்போய்விட்டது. இதனால், யூனிட்டில் அனைவரும் ரொம்பவும் அப்செட்டாம். `` `கல்யாண வீட்லயே கால் நீட்டி அழறவன், எழவு வீட்ல சும்மா இருப்பானா’ங்கற கதையா... சும்மாவே அந்த ஹீரோயின் டேட் கிடைச்சு, வந்து நடிக்குறது குதிரைக்கொம்பு. இதுல இது வேறயா...’’ என்று புலம்பித் தள்ளுகிறார்கள்!