Published:Updated:

மிஸ்டர் மியாவ்

சாக்‌ஷி அகர்வால்
பிரீமியம் ஸ்டோரி
சாக்‌ஷி அகர்வால்

இதுவரை போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திராத பிரபாஸ், முதன்முறையாக ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய இயக்குநர் சந்தீப்பின் கதைக்காகக் காக்கி யூனிஃபார்ம் அணிகிறார்

மிஸ்டர் மியாவ்

இதுவரை போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திராத பிரபாஸ், முதன்முறையாக ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய இயக்குநர் சந்தீப்பின் கதைக்காகக் காக்கி யூனிஃபார்ம் அணிகிறார்

Published:Updated:
சாக்‌ஷி அகர்வால்
பிரீமியம் ஸ்டோரி
சாக்‌ஷி அகர்வால்

கொரோனா நெருக்கடிகள் தீவிரமானதால் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைக்கச் சொல்லிவிட்டார் இயக்குநர் ராஜமௌலி. இதனால், பொங்கல் நேரத்தில் ரிலீஸாகும் அஜித்தின் ‘வலிமை’ படத்துக்குத் தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் அதிக திரையரங்குகள் கிடைக்க நல்ல வாய்ப்பு! அதேநேரம் பொங்கல் நேரத்தில் தியேட்டர்களில் நூறு சதவிகித இருக்கை அனுமதி கிடைக்குமா, கிடைக்காதா என்கிற பதற்றமும் ‘வலிமை’ படக்குழுவைக் கலங்கடிக்கிறது. ‘உதயநிதியிடம் போனில் பேசினால் தீர்வுக்கு வாய்ப்பிருக்கிறது’ எனத் தயாரிப்புத் தரப்பு சொல்ல, அதற்கு அறவே மறுத்துவிட்டாராம் அஜித். இதற்கிடையில் கொரோனா பரவல் தீவிரமானால், தியேட்டர்களை மூட உத்தரவிடுகிற மனநிலையில் தமிழக அரசு இருப்பதாகத் தகவல் கசிய, ‘வலிமை’ படக்குழு படாதபாடுபடுகிறது!

‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் கொண்டாடிய வெற்றிவிழாவில், சிம்பு கலந்துகொள்ளவில்லை. அதேநேரம் ‘மாநாடு’ வெற்றிவிழாவைத் தனியாக நடத்தி, அதில் ரசிகர்களைப் பெருமளவு திரட்டி கெத்து காட்டப்போவதாக ஓப்பனாகவே அறிவித்தார் சிம்பு. இந்நிலையில், கொரோனா நெருக்கடி காரணங்களைச் சொல்லி வெற்றிவிழா ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிக்கை வெளியாகியிருக்கிறது. உண்மையில் விழாவுக்கான பட்ஜெட்டாக நண்பர்கள் காட்டிய செலவுக் கணக்குதான் சிம்புவுக்கு மயக்கம் வரவைத்ததாம். ‘ஒத்திவைப்பு’ என்கிற முடிவு ‘ரத்து’ என மாறினாலும் ஆச்சர்யத்துக்கு இல்லை என்கிறார்கள்!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

இதுவரை போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திராத பிரபாஸ், முதன்முறையாக ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய இயக்குநர் சந்தீப்பின் கதைக்காகக் காக்கி யூனிஃபார்ம் அணிகிறார். இது பிரபாஸின் 25-வது படம் என்பதுதான் ஹைலைட். படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கப் பல நாயகிகள் போட்டிபோட, பாலிவுட் நடிகையான கரினா கபூரைப் பரிசீலிக்கிறது படக்குழு!

எக்ஸ்க்ளூசிவ்: வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் சூரி, பாவப்பட்ட போலீஸ்காரராக படத்தில் மிரட்டியிருக்கிறாராம். சூரிக்கு நிச்சயம் நேஷனல் அவார்டு கிடைக்கும் என்கிறார்கள். இந்நிலையில், சூரி மீண்டும் ஹீரோவாக நடிக்க, பல இயக்குநர்கள் கதை சொல்லிக் காத்திருக்க, யார் பெயர் `டிக்’ ஆகியிருக்கிறது தெரியுமா? இயக்குநர் அமீர்!

உஷ்: நம்பர் நடிகையின் மனம் கவர்ந்த பிறகும்கூட, எளிமையாகத்தான் இருந்தார் அந்த இயக்குநர். சமீபத்தில் என்ன மாற்றம் நடந்ததோ? நெருங்கியவர்களே புலம்புகிற அளவுக்குப் பந்தா, பகட்டு என நடந்துகொள்கிறாராம். ‘பாதுகாப்புக்கு ஜிம் பாய்ஸ் நியமிக்கலாமா?’ என்கிற ஆலோசனைகள் வேறாம். #எனை மாற்றும் காதலே... எதையும் மாற்றும் காதலே!