Published:Updated:

மிஸ்டர் மியாவ்

சாய் தன்ஷிகா
பிரீமியம் ஸ்டோரி
சாய் தன்ஷிகா

தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் நான்காவது படத்துக்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன

மிஸ்டர் மியாவ்

தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் நான்காவது படத்துக்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன

Published:Updated:
சாய் தன்ஷிகா
பிரீமியம் ஸ்டோரி
சாய் தன்ஷிகா

* முன்னணி நடிகைகளுக்குப் பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீணா ரவி, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் நடிகையானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படம் வரவேற்பைப் பெற்றது. ‘மாஸ்டர்’ படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகனன், ‘ஈஸ்வரன்’ மற்றும் ‘பூமி’ படங்களின் ஹீரோயின் நிதி அகர்வால்... என ஒரே நேரத்தில் இவர் டப்பிங் பேசியிருக்கும் மூன்று படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாவதால் குஷியிலிருக்கிறார் ரவீணா!

* ‘எந்தவொரு செயலையும் 48 நாள்கள் தொடர்ந்து செய்தால், அது நம்முடைய பழக்கமாகிவிடும்’ என்கிற கேப்ஷனோடு, தனது 48 நாள்கள் சேலஞ்சை அறிவித்திருக்கிறார் நடிகை சாய் தன்ஷிகா. தொடர்ந்து 48 நாள்கள் காலையில் 5 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி, தியானம் செய்யவிருக்கிறாராம். கூடவே அவர் பின்பற்றும் டயட் டிப்ஸ்களையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்யவிருக்கிறாராம். ஒவ்வொரு வருடமும் இப்படியான முயற்சிகள் செய்து, அவை நாளடைவில் நடக்காமல் போய்விடுகின்றன; இந்த முறை தடங்கல்கள் எதுவும் வரக் கூடாது என்பதால் இந்த ஏற்பாடாம்!

சாய் தன்ஷிகா
சாய் தன்ஷிகா

* தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் நான்காவது படத்துக்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குக்கான போட்டோ ஷூட்டையும், டீசர் காட்சிகளையும் சமீபத்தில் எடுத்திருக்கிறார்கள். இது ‘புதுப்பேட்டை 2’ என்று பரவலாகப் பேசப்பட்டுவரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்கிறார்கள்.

* ‘பிகில்’ படத்தில் அதிகம் பாராட்டுகளைப் பெற்ற ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர், நூறு நாள் சேலஞ்ச் ஒன்றை எடுத்து தன் எடையை 20 கிலோ குறைத்திருக்கிறார். “ஹிப் சைஸ் 12 சென்டிமீட்டர் குறைந்திருப்பதால், பழைய உடைகளைப் போட முடியவில்லை யென்றாலும் நான் ஹேப்பி. முறையான பயிற்சி இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதை இதன் மூலம் உணர்ந்தேன்” என்று தனது அளவில்லா மகிழ்ச்சியைப் பகிர்ந்திருக்கிறார் இந்திரஜா!

உஷ்...

டோலிவுட் வாரிசுடன் அறிமுகமான நடிகை, பெரிதாக சோபிக்கவில்லை. டோலிவுட், பாலிவுட் என அக்கம்பக்கம் சென்ற அந்த நடிகைக்கு, அங்கேயும் பெரிதாக வாய்ப்பு வரவில்லை. மலையாள வாரிசு நடிகருடன் ஒரே ஒரு படத்தில் நடித்தார். இப்போது வெப் சீரீஸில் இறங்கிவிட்டார். இன்ஸ்டாகிராமில் சுமார் ஒன்றேகால் கோடி ஃபாலோயர்களை வைத்திருக்கும் இவர் பதிவிடும் புகைப்படங்களெல்லாம் மிட் ஸோன் கிளாமரில்தான் இருக்கும். அவ்வப்போது பிகினி புகைப்படத்தைப் பதிவிட்டு லட்சக்கணக்கான ஹார்ட்டின்களைக் குவிக்கிறார். பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கும் இவருக்கு, ஹார்ட்டின்கள் மட்டுமே குவிகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism