Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

நேரடியாகத் தெலுங்கில் கால்வைக்க நினைத்த தனுஷ், வெங்கி அட்லுரி இயக்கத்தில் ‘வாத்தி’ படத்தில் நடிக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

நேரடியாகத் தெலுங்கில் கால்வைக்க நினைத்த தனுஷ், வெங்கி அட்லுரி இயக்கத்தில் ‘வாத்தி’ படத்தில் நடிக்கிறார்.

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

கடந்த வருட கொரோனா நெருக்கடியால், பல மாதங்கள் ஷூட்டிங் நடத்த முடியாமல் ‘வலிமை’ குழு திண்டாடியது. ஒருவழியாக ஷூட்டிங் முடிந்து, தீபாவளி நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டார் தயாரிப்பாளர் போனி கபூர். ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் தீபாவளிக்குத் திட்டமிடப்பட்டிருந்ததால், ‘நேரடி மோதல் வேண்டாம்’ என நினைத்தார் அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் சிவா. அவர் கேட்டுக்கொண்டதால் போனி கபூரிடம் பேசி `வலிமை’ படத்தைப் பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணலாம் என்றார் அஜித். படம் தொடங்கி இரண்டு வருடங்களான நிலையில், இதையும் பொறுத்துக்கொண்டார் போனி கபூர். கொரோனா நெருக்கடியால் பொங்கலுக்கும் ‘வலிமை’யை ரிலீஸ் செய்ய முடியாமல் போக, போனி கபூருக்குத் தத்தளிப்பான நிலை. ஏற்கெனவே மதுரை அன்புச்செழியனிடம் கடன் வாங்கியிருக்கும் போனி கபூர், தமிழக விநியோக உரிமையை அவருக்குக் கைமாற்றிக் கொடுத்தார். அடுத்த படம் தருவதாக அஜித் சொல்லியிருக்கும் வார்த்தைகள்தான் போனி கபூருக்கு ஒரே ஆறுதல்!

நேரடியாகத் தெலுங்கில் கால்வைக்க நினைத்த தனுஷ், வெங்கி அட்லுரி இயக்கத்தில் ‘வாத்தி’ படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘சார்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ரெடியாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கியது. முதல்நாளே, ‘`எனக்கான முக்கியத்துவத்தைக் கொடுங்க… என்னை நிக்கவெச்சுட்டு யாருக்கு ஷாட் வெக்கிறீங்க?’’ எனக் கடுமையான குடைச்சலைக் கொடுத்துவிட்டாராம் தனுஷ். `தமிழ் ஹீரோக்கள் இப்படியெல்லாம் டார்ச்சர் கொடுப்பாங்களா?’ என திகிலடித்துப்போனதாம் தெலுங்குப் படவுலகம்!

மிஸ்டர் மியாவ்

எக்ஸ்க்ளூசிவ்: ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் நடிகர் விக்ரம் - இயக்குநர் பா.இரஞ்சித் இணையும் படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. கோலார் தங்கவயலில் தலைமுறைகளைத் தாண்டி வேலை பார்க்கும் தலித் தொழிலாளர்களைப் பற்றிய கதறல் கதையாம் இது. இதே கதைக்களத்தை வைத்து இயக்குநர் வெற்றிமாறன் பல வருடங்களுக்கு முன்னரே ஒரு கதையை எழுதிவைத்திருந்தாராம். யஷ் நடிப்பில் வெளியான ‘கே.ஜி.எஃப்’ கோலார் பின்னணியை அப்பட்டமாக, தமிழர்களின் பங்களிப்பை மையமாக்கிக் கதையை மாற்றினாராம் வெற்றிமாறன். இப்போது இரஞ்சித்தும் அதே கதைக்களத்தைத் தொடுவதால், ‘இனி என் கதையைத் தூக்கிப் பரணில் போட வேண்டியதுதான்’ என நெருங்கிய நண்பர்களிடம் மனம் வெறுத்துப்போய் சொன்னாராம் வெற்றிமாறன்!

எக்ஸ்க்ளூசிவ்: பல இயக்குநர்களிடம் வரிசையாகக் கதை கேட்ட ரஜினிகாந்த், ‘சீனியர் இயக்குநர்களை நம்புவதா...’, ‘புது இயக்குநர்களோடு பயணிப்பதா...’ என ரொம்பவே குழம்பிப்போயிருந்தார். ‘ஜாதகம் சரியாக இருக்கும் இயக்குநருடன் கைகோப்பதே சிறப்பு’ எனக் குடும்பத்தினர் சொல்ல, அதனடிப்படையில் இயக்குநர் நெல்சன் சொன்ன கதையை ஓகே செய்திருக்கிறார் ரஜினி. தற்போது விஜய்யைவைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கிவரும் நெல்சனுக்கு, இன்னும் ஏழு வருடங்களுக்கு ஜாதகரீதியாகப் பொற்காலமாம். சமீபத்தில் நெல்சன் சொன்ன ஒன்லைன் ரஜினியைப் பரவசப்படுத்த, சன் பிக்சர்ஸிடம் சொல்லி அட்வான்ஸ் கொடுக்கச் சொல்லிவிட்டாராம்!

உஷ்...

சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்த ‘வீரப் பெண்மணி’ குறித்த வரலாற்றுப் படத்தை இயக்கப்போவதாக வருடக்கணக்கில் அறிவிப்பை மட்டுமே வெளியிட்டுவருகிறார் பிள்ளையார் இயக்குநர். பெரிய பட்ஜெட்டுக்கு அடிபோடும் இயக்குநர், தயாரிப்பாளரைவைத்து ஹீரோயினைப் பிடிப்பதா, ஹீரோயினைவைத்து தயாரிப்பாளரைப் பிடிப்பதா எனத் திண்டாடுகிறாராம்!